தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதனை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் .
இந்த நிலையில் விஜய் நடிக்கும் 68வது படமான தளபதி 68 குறித்து அறிவிப்புகள் இரண்டு மாதங்களுக்கு முன்பே வெளியானது. வெங்கட் பிரபு இயக்க உள்ளதாகவும், இத்திரைப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், மேலும் நடிகர்கள் தேர்வும் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
அதில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படும் நிலையில், ஒரு கதாபாத்திரத்திற்கு பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வரும் சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்ய உள்ளதாகவும், விஜய் வெங்கட்பிரபு கூட்டணியில் உருவாக உள்ள திரைப்படம் திரில்லர் வகையில் உருவாகும் என கூறப்படுகிறது. மேலும், இதற்கான படப்பிடிப்பு செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் மாதம் தொடங்கலாம் என படக் குழுவினருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தளபதி 68 ல் டெரர் வில்லனாக நடிக்க பிரபல ஹிந்தி நடிகர் அமீர்கானிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். நடிகர் அமீர்கான் கடைசியாக நடித்த லால் சிங் சத்தா படம் பிளாப் ஆனதால் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் ஐஸ்வர்யா கல்பாத்தி சமீபத்தில் அமீர் கானை சந்தித்து பேசி இருக்கிறார். அதன் புகைப்படம் வெளியாகியிருந்தது. அதனால் அமீர்கான் தான் தற்போது தளபதி 68 வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற தகவல்களும் பரவி வருகிறது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.