பிரசவ வார்டில் ஜெயம் ரவியின் மனைவி…பளார் விட்ட மாமியார் – மகப்பேறு அனுபவம்!

Author: Shree
3 May 2023, 2:21 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி அவரது அண்ணன் இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் இருவருக்குமே மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் பிறகு சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், எம். குமரன் சன் ஆஃவ் மகாலஷ்மி, சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், பேராண்மை, எங்கேயும் காதல், தனி ஒருவன் உள்ளிட்ட பல்வேறு தொடர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

ஜெயம் ரவி கடந்த 2009ம் ஆண்டு ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஆரவ், அயான் என இரண்டு மகன்கள் உள்ளனர். ஜெயம் ரவி கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அருண்மொழிவர்மனாக நடித்திருந்தார். இந்நிலையில் தனது மனைவி ஆர்த்தியுடன் பிரபல தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டிகொடுத்துள்ள இந்த ஜோடி தங்கள் காதல் வாழ்க்கையில் நடந்த நிறைய ஸ்வாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.

அப்போது மனைவிக்கு பிரசவத்தின் போது நடந்த நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டார். அதாவது, முதல் குழந்தை பிறக்கும் பொழுது ஆர்த்தி நான் உடன் இருக்க வேண்டும் என்று தான் நினைத்திருந்தார்; ஆனால் எதிர்பாராத விதமாக குழந்தை கொஞ்சம் சீக்கிரமாகவே பிறந்து விட்டது. அந்த சமயத்தில் நான் எங்கேயும் எப்போதும் படத்திற்காக பாரீஸில் இருந்தேன். முதல் குழந்தை ஆரவ் நான் அருகில் இல்லாமல் பிறந்தான்.

அதன் பிறகு ஆர்த்தி பேசும் போது, இரண்டாம் குழந்தை பிறக்கும் போது பிரசவ வார்டில் சிசேரியன் பண்ணும்போது ரவி மயங்கி விழுந்துவிட்டார். பின்னர் என் மாமியால் கன்னத்தில் பளார் என்று அறைந்து எழுப்பினார். மேலும், நான் கர்ப்பமாக இருந்தபோது என்னை ரவி அருகில் இருந்து அப்படி பார்த்துக் கொண்டார்.

நான் வாந்தி எடுக்கும் பொழுது அதை கையில் ஏந்தினார். இரவில் நான் எழுந்து இதை சாப்பிட வேண்டும் அதை சாப்பிட வேண்டும் என்று சொல்லும் போது கூட அவர் எழுந்து வருவார். கணவராக அவருக்கு நான் 100 மதிப்பெண்ணுக்கு மேல்தான் கொடுப்பேன்.” என்று கூறினார் ஆர்த்தி. இதோ அந்த வீடியோ:

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 1460

    29

    6