அதுதா இப்ப முக்கியமா போச்சே… காதல் தோல்வியால் கதறி அழுத உதயநிதி பட நடிகை..!

Author: Vignesh
20 March 2023, 8:15 pm

தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. முதல் படம் நல்ல வெற்றியை பெற்றிருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நடிகை ஆத்மிகாவிற்கு படவாய்ப்புகள் அமையவில்லை.

மீசையை முறுக்கு படத்திற்கு அடுத்ததாக ஆத்மிகா நடத்த தமிழ் திரைப்படம் “நரகாசுரன்” ஆனால் அந்த படம் இன்றுவரை ரிலீஸ் ஆகவில்லை .

ஒரு சில படங்களிலேயே நடிக்கும் ஆத்மிகா சமீபத்தில் விஜய் ஆண்டனியுடன் ” கோடியில் ஒருவன் ” நடித்தார் அந்த படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

aathmika -updatenews360

ஆனால் ஆத்மிகாவோ படத்தில் ஆங்காங்கே வந்துபோவதால் ரசிகர்கள் மனதில் பதியாமல் போய்விட்டார் .தற்போது வைபவ், வரலட்சுமியுடன் காட்டேரி, உதயநிதியுடன் கண்ணை நம்பாதே என்ற திரை படத்தில் நடித்துகொண்டிருக்கிறார்.

இந்நிலையில், பட வாய்ப்புக்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வரும் ஆத்மிகா.

இந்நிலையில் நடிகை ஆத்மிகா சமீபத்தில் பேட்டி அளித்த தனது காதல் தோல்வி குறித்து பேசியுள்ளார்.

aathmika-updatenews360

இதில் ‘தன்னுடைய காதல் தோல்வி தான் தன்னை மிகவும் பாதித்தது என்றும், தன்னை காதலித்தவர் தான் தன்னை விட்டு விலகி சென்றதாகவும், அது தனக்கு வருத்தத்தை கொடுத்ததாகவும், அதை நினைந்து இரவு முழுவதும் அழுததாகவும், தற்போது தான் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.

aathmika -updatenews360

மேலும் அவர், வாழ்க்கையில் பணமா அல்லது புகழா முக்கியம் என யாரவது தன்னிடம் கேட்டால், நிச்சயம் பணம் தான் என்று கூறுவேன் என்றும், ஏனென்றால் அதுதான் எதார்த்தம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்’ என தெரிவித்துள்ளார். நடிகை ஆத்மிகா பகிர்ந்த இந்த விஷயங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

  • abhirami spoke in tamil in thug life movie press meet இங்கிலிஷா? நோ- தக் லைஃப் விழாவில் தக் லைஃப் காட்டிய அபிராமி! குவியும் பாராட்டுக்கள்