அந்த மாதிரி சீன்’ல நடிக்க கஷ்டமா இருக்கும்: நடிகை ஆத்மிகா Open Talk..!

Author: Rajesh
26 March 2023, 11:17 am

தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. முதல் படம் நல்ல வெற்றியை பெற்றிருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நடிகை ஆத்மிகாவிற்கு படவாய்ப்புகள் அமையவில்லை.

aathmika -updatenews360

மீசையை முறுக்கு படத்திற்கு அடுத்ததாக ஆத்மிகா நடத்த தமிழ் திரைப்படம் “நரகாசுரன்” ஆனால் அந்த படம் இன்றுவரை ரிலீஸ் ஆகவில்லை. சமீபத்தில் விஜய் ஆண்டனியுடன் இவர் நடித்த “கோடியில் ஒருவன்” மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஆத்மிகா படத்தில் ஆங்காங்கே வந்துபோவதால் ரசிகர்கள் மனதில் பதியாமல் போய்விட்டார். தற்போது வைபவ், வரலட்சுமியுடன் காட்டேரி, உதயநிதியுடன் கண்ணை நம்பாதே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பட வாய்ப்புக்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வரும் ஆத்மிகா.

இந்நிலையில், ஆத்மிகா சமீபத்திய பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பேட்டியில் பகிர்ந்துள்ளார். அப்போது பேசிய அவர், “நான் சில படங்களில் லிப் லாக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறேன். அந்த மாதிரியான சீன்களில் நடிக்க கஷ்டமாக இருக்கும். நான் எப்போதும் சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க தான் ஆசைப் படுகிறேன்” என்று கூறியுள்ளார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?