உருகி உருகி காதலித்த சாக்லேட் பாய்… அஜால் குஜால் பண்ணிட்டு அல்வா கொடுத்த சிம்ரன்..!
Author: Vignesh28 July 2023, 10:30 am
ஒல்லி பெல்லி இடுப்பழகியாக ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் தன் இடுப்பசைவால் ஆட்டி படைத்தவர் நடிகை சிம்ரன். மும்பை பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக சினிமாத்துறையில் அறிமுகமானார்.
1995-இல் அவர் நடித்த முதல் படமான சனம் பெருந்தோல்வியை அடைந்தது. அதன் பின்னர் இந்தியை தவிர மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சிம்ஹடா மாரி படத்திலும் அப்பாய் காரி பெல்லி என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார்.
தமிழில் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இங்கு முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், வாலி , ஜோடி , பிரியமானவளே , பஞ்சதந்திரம் , கன்னத்தில் முத்தமிட்டால் , வாரணம் ஆயிரம் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்தார்.
சிம்ரன் இளம் வயதில் பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார். முதன் முதலில் நடிகர் அப்பாஸை காதலித்தாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் சேர்ந்து விஐபி என்ற படத்தில் நடித்திருந்தனர். அப்பாஸ் சிம்ரனை திருமணம் செய்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர்.
இதனிடையே, பூச்சூடவா படத்தில் நடித்த சமயத்தில், சிம்ரனுக்கு ஜோடியாக அப்பாஸ் நடித்து இருந்தார். இருவரின் கெமிஸ்ட்ரியும் மிகப் பொருத்தமாக இருந்தது அனைவரும் அறிந்த விஷயமே.
இந்தநிலையில், இருவரும் காதலித்து வந்த சமயத்தில், சிம்ரன் முன்னணி நடிகருடன் நடித்து டாப் இடத்திற்கு வந்ததால் அப்பாஸின் காதலை சிறிதும் பொருட்படுத்தாமல் பிரேக்கப் செய்து கொண்டார்.
மேலும், சிம்ரன் முன்னணி நடிகர்களுடன் லிவிங் டுகெதர் உறவில் இருந்து வந்துள்ளார். சிம்ரன் முன்னணி நடிகர்களை நம்பியும், தான் டாப் நடிகையாக இருக்கிறோம் என்ற மமதையில், அப்பாஸின் காதலை முறித்துக் கொண்டார்.
இதனிடையே, சில வருடங்களில் சிம்ரனின் மார்க்கெட் சரிந்தது. அப்பொழுது அப்பாஸ் முன்னுக்கு வந்த அதே நேரத்தில் சிம்ரன் பிண்ணுக்கு தள்ளப்பட்டார் வாய்ப்பு இல்லாமல் காணாமலும் போனார்.