எனக்கு தான் பொறந்தானானே சந்தேகப்பட்டேன்.. மகன் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகர் அப்பாஸ்..!
Author: Vignesh20 March 2024, 6:57 pm
1996-ம் ஆண்டு அப்பாஸ் காதல் தேசம் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு சூப்பர்ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் சாக்லேட் பாயாக வலம் வந்தார். தமிழில் கோ படத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் 2016-ம் ஆண்டு பச்சைக்கள்ளம் (மலையாளம்) படம் வெளியானது.
எராம் அலி என்னும் பேஷன் டிசைனரை கடந்த 2001-ம் ஆண்டு அப்பாஸ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அய்மான் என்னும் மகனும், எமிரா என்னும் மகளும் இருக்கின்றனர். அப்பாஸ் தற்போது குடும்பத்தாருடன் ஆக்லாந்தில் (நியூசிலாந்து) வசிக்கிறார்.
இந்நிலையில் நடிகர் அப்பாஸ் பேட்டி ஒன்றில், வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நடிகர் அப்பாஸ் தனது மனைவி மகன் மற்றும் மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். சமீபத்தில், தமிழ்நாடு வந்திருந்த அப்பாஸ் மீண்டும் சினிமாவில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில், அப்பாஸ் கொடுத்த பேட்டி ஒன்றில் தனது மகன் குறித்து பேசியது தற்போது இணையதளத்தில் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அந்த பேட்டியில், நடிகர் அப்பாஸிடம் அவரது மூத்த மகன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் கூறிய அப்பாஸ் அவர் ரொம்ப அமைதியான ஒருவர் அந்த வயதில், நான் ரொம்ப கூத்து கலாட்டா எல்லாம் பண்ணிக்கிட்டு இருந்தேன். ஆனால், என் மகன் அப்படி கிடையாது. ரொம்பவே சிம்பிள் மெச்சூராக இருக்கிறார். அதனால், எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்னுடைய மகனா என சந்தேகம் இருந்தது. பிறகு டிஎன்ஏ செக் பண்ணும் போது தான் என் பையன் தான் என தெரிவித்தார்கள் என பேசியுள்ளார்.