எங்களை மாதிரி கஷ்டப்பட்டு வந்திருந்த அருமை புரியும்.. அவங்க அப்பா பெரிய ஆள்.. அப்பாஸ் பளீச்..!

Author: Vignesh
8 August 2023, 12:30 pm

1996-ம் ஆண்டு அப்பாஸ் காதல் தேசம் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு சூப்பர்ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் சாக்லேட் பாயாக வலம் வந்தார். தமிழில் கோ படத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் 2016-ம் ஆண்டு பச்சைக்கள்ளம் (மலையாளம்) படம் வெளியானது.

நடிகர் அப்பாஸ் முதல் படத்திலேயே புகழ் உச்சிக்கு சென்றார். இதன் பின்னர் பல வெற்றி படங்களை கொடுத்தார். தமிழ் சினிமாவில் நடிகர் அப்பாஸ் பெரிய நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், சினிமாவில் இருந்த காணாமலே போய்விட்டார். தற்போது நியூஸிலாந்தில் நடிகர் அப்பாஸ் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

abbas-updatenews360

எராம் அலி என்னும் பேஷன் டிசைனரை கடந்த 2001-ம் ஆண்டு அப்பாஸ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அய்மான் என்னும் மகனும், எமிரா என்னும் மகளும் இருக்கின்றனர். அப்பாஸ் தற்போது குடும்பத்தாருடன் ஆக்லாந்தில் (நியூசிலாந்து) வசிக்கிறார்.

abbas-updatenews360

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் அப்பாஸ் 90களில் இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்த நடிகர் பிரசாந்த் குறித்து பேசியுள்ளார். தற்போது பீல்ட் அவுட் ஆகி எந்த ஒரு படமும் சரியாக போகாத நிலையில், கம்பேக் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார் பிரசாந்த்.

prasanth-updatenews360

இதனிடையில், நடிகர் அப்பாஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில், பிரசாந்த் குறித்து கேட்கையில் அவர், தனக்கு நல்ல நண்பர் என்றும், நன்றாக நடனமாடுவார். ஆனால், நடிப்பு பெரிதாக கவர்ந்தது இல்லை அவருடைய தந்தை சினிமாவில் பெரிய ஆள் என்பதால் தங்களை போல் கஷ்டப்பட்டு வரவில்லை என பதிலளித்துள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 638

    0

    0