இனிமேல் தான் ஆட்டமே ஆரம்பிக்க போகுது… சின்னத்திரையில் மாஸ் என்ட்ரி கொடுத்த அப்பாஸ்(வீடியோ)

Author: Shree
26 August 2023, 8:03 pm

1996-ம் ஆண்டு அப்பாஸ் காதல் தேசம் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு சூப்பர்ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் சாக்லேட் பாயாக வலம் வந்தார். தமிழில் கோ படத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் 2016-ம் ஆண்டு பச்சைக்கள்ளம் (மலையாளம்) படம் வெளியானது.

எராம் அலி என்னும் பேஷன் டிசைனரை கடந்த 2001-ம் ஆண்டு அப்பாஸ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அய்மான் என்னும் மகனும், எமிரா என்னும் மகளும் இருக்கின்றனர். அப்பாஸ் தற்போது குடும்பத்தாருடன் ஆக்லாந்தில் (நியூசிலாந்து) வசிக்கிறார்.

நடிகர் அப்பாஸ் முதல் படத்திலேயே புகழ் உச்சிக்கு சென்றார். இதன் பின்னர் பல வெற்றி படங்களை கொடுத்தார். தமிழ் சினமாவில் நடிகர் அப்பாஸ் பெரிய நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், சினிமாவில் இருந்த காணாமலே போய்விட்டார். தற்போது நியூஸிலாந்தில் நடிகர் அப்பாஸ் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

வயிற்று பிழைப்பிற்காக நியூஸிலாந்தில் பெட்ரோல் பங்க் , பாத்ரூம் கிளீனர் உள்ளிட்ட வேலைகளை செய்து வருவதாக சில மாதங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்நிலையில் அப்பாஸ் தற்போது மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வந்துள்ளார்.

ஆம், அவர் பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். அதுமட்டும் அல்லாமல் தற்போது விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் ஷோவில் கெஸ்ட் ஆக பங்கேற்று இருக்கிறார். சின்னத்திரையில் மாஸ் என்ட்ரி கொடுத்து இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கியுள்ள அப்பாஸுக்கு பலர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!