பத்த வச்சதே ரஜினி தான்.. ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்த பிரபல நடிகர்..!

Author: Vignesh
25 July 2023, 8:27 pm

தமிழ் சினிமாவில் பல கமர்சியல் படங்களை எடுத்து ஹிட் கொடுத்தவர் தான் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். இவருடைய இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் படையப்பா.

padayappa - updatenews360

இந்த திரைப்படம் இன்றைய தலைமுறையினருக்கும் பிடித்த படமாக உள்ளது. மேலும், படையப்பா படம் வணிக ரீதியாக மிகப்பெரிய லாபத்தை ஈட்டியது. படையப்பா படம் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இருவருக்குமே திருப்புமுனையாக அமைந்தது என்றும் கூறலாம். அந்த அளவிற்கு அவர்களது கெரியரில் மிக முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது.

padayappa - updatenews360

இப்படத்திற்கு பிறகு ரம்யா கிருஷ்ணனுக்கு பல படங்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். இந்த நிலையில், அப்பாஸ் படையப்பா படப்பின் போது நடந்த சில சுவாரசியமான நிகழ்வுகளை, ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தனக்கு பிடித்த நடிகர் என்றால் அது ரஜினி சார் என்றும், படையப்பா படத்தில் அவுட்டோர் சூட்டிங் இருந்தது என்றும், அப்போது தனக்கு ஸ்மோக் பிடிக்க வேண்டும் என்று தோன்றியதாகவும், ரசிகர்கள் பத்தாயிரம் பேர் இருந்தார்கள் எனவும், சார் பக்கத்தில் இருப்பதால் கொஞ்சம் தள்ளி போய் அடிக்கலாம் என்று பார்த்தால் போக முடியாத சூழ்நிலை இருந்ததாகவும், ரஜினி சார் உடனே தன்னை அழைத்து என்னாச்சு என்று கேட்டார். தானும் தம் அடிக்கணும் என்று கூறிய நிலையில், வாங்க அடிக்கலாம் என்று சொல்லி அவர் பிரான்ட் சிகரெட்டை தனக்கு அவரே பற்றவைத்துக் கொடுத்தார் என்று அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!