எனக்கும் சிம்ரனுக்கும் இருந்த காதல்?.. பல வருடங்களுக்குப் பிறகு உண்மையை உடைத்த அப்பாஸ்..!

Author: Vignesh
4 August 2023, 1:45 pm

தமிழில் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் சிம்ரன். இங்கு முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், வாலி , ஜோடி , பிரியமானவளே , பஞ்சதந்திரம் , கன்னத்தில் முத்தமிட்டால் , வாரணம் ஆயிரம் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்தார்.

சிம்ரன் இளம் வயதில் பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார். முதன் முதலில் நடிகர் அப்பாஸை காதலித்தாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் சேர்ந்து விஐபி என்ற படத்தில் நடித்திருந்தனர். அப்பாஸ் சிம்ரனை திருமணம் செய்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர்.

poochudava-updatenews360

இதனிடையே, பூச்சூடவா படத்தில் நடித்த சமயத்தில், சிம்ரனுக்கு ஜோடியாக அப்பாஸ் நடித்து இருந்தார். இருவரின் கெமிஸ்ட்ரியும் மிகப் பொருத்தமாக இருந்தது அனைவரும் அறிந்த விஷயமே.

இந்தநிலையில், இருவரும் காதலித்து வந்த சமயத்தில், சிம்ரன் முன்னணி நடிகருடன் நடித்து டாப் இடத்திற்கு வந்ததால் அப்பாஸின் காதலை சிறிதும் பொருட்படுத்தாமல் பிரேக்கப் செய்து கொண்டார்.

poochudava-updatenews360

மேலும், சிம்ரன் முன்னணி நடிகர்களுடன் லிவிங் டுகெதர் உறவில் இருந்து வந்துள்ளார். சிம்ரன் முன்னணி நடிகர்களை நம்பியும், தான் டாப் நடிகையாக இருக்கிறோம் என்ற மமதையில், அப்பாஸின் காதலை முறித்துக் கொண்டார்.

poochudava-updatenews360

இதனிடையே, சில வருடங்களில் சிம்ரனின் மார்க்கெட் சரிந்தது. அப்பொழுது அப்பாஸ் முன்னுக்கு வந்த அதே நேரத்தில் சிம்ரன் பிண்ணுக்கு தள்ளப்பட்டார் வாய்ப்பு இல்லாமல் காணாமலும் போனார்.

poochudava-updatenews360

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சிம்ரன் குறித்து சிலவற்றை தகவல்களை அப்பாஸ் பகிர்ந்துள்ளார். அதில் அப்பாஸ், சிம்ரனுக்கும் எனக்கும் காதல் எல்லாம் இல்லை, சிம்ரன் எனக்கு நல்ல நண்பர், ஸ்கிரீனில் நல்ல ஜோடியாக நடித்தோம். அதிக படம் பண்ணவில்லை. சிம்ரனுடன் தமிழில் ரெண்டு படம் தெலுங்கில் ஒரு படம் பண்ணேன். நல்ல கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடிக்கும், இப்ப கூட நான் அவரிடம் பேசி வருகிறேன் என்று தெரிவித்து பல வருட வதந்திக்கு அப்பாஸ் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 766

    4

    2