அந்த நடிகை மீது கிரஷ்.. எக்ஸ் காதலி பற்றி உருகிய அப்பாஸ்.. நடுவில் புகுந்து ஆட்டையை கலைத்தது இவர்தானாம்..!

Author: Vignesh
8 June 2024, 12:33 pm

1996-ம் ஆண்டு அப்பாஸ் காதல் தேசம் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு சூப்பர்ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் சாக்லேட் பாயாக வலம் வந்தார். தமிழில் கோ படத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் 2016-ம் ஆண்டு பச்சைக்கள்ளம் (மலையாளம்) படம் வெளியானது.

எராம் அலி என்னும் பேஷன் டிசைனரை கடந்த 2001-ம் ஆண்டு அப்பாஸ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அய்மான் என்னும் மகனும், எமிரா என்னும் மகளும் இருக்கின்றனர். அப்பாஸ் தற்போது குடும்பத்தாருடன் ஆக்லாந்தில் (நியூசிலாந்து) வசிக்கிறார்.

abbas- updatenews360

மேலும் படிக்க: சொகுசு கப்பலில் பேச்சிலர் பார்ட்டி.. அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா திருமணம் எங்கே, எப்போது நடக்கப் போகுது தெரியுமா?..

இந்நிலையில் நடிகர் அப்பாஸ் பேட்டி ஒன்றில், வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நடிகர் அப்பாஸ் தனது மனைவி மகன் மற்றும் மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். சமீபத்தில், தமிழ்நாடு வந்திருந்த அப்பாஸ் மீண்டும் சினிமாவில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில், அப்பாஸ் கொடுத்த பேட்டி ஒன்றில் தனது மகன் குறித்து பேசியது தற்போது இணையதளத்தில் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

abbas- updatenews360

மேலும் படிக்க: கோடிக்கணக்கில் சம்பாதிச்சும் செந்தில் அதுல வீக்கா?.. சீக்ரெட் சொன்ன மனைவி..!

அந்த பேட்டியில், அப்போதைய காலகட்டத்தில் சில நடிகைகளுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். அதில் ஒருவர் தான் நடிகை சிம்ரன் படங்களில் இருவரும் இணைந்து நடித்த போது, இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஏற்பட்டு காதலாக மாறியுள்ளதாக செய்திகள் வெளியானது. சிம்ரன் இருந்தால் தான் நடிப்பேன் என்று கூறியது உண்மையா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த, அப்பாஸ் சிம்ரனை மிகவும் பிடிக்கும். ஏனென்றால், இருவரும் மூன்று படம் சேர்ந்து பணி செய்து இருக்கிறோம். அப்போது, கிளோஸ் ஆக இருக்கும்போது ஒரு ஈர்ப்பு வந்தது.

ப்ரொபோஸ் செய்யும் அளவிற்கு செல்லவில்லை. இதற்கு காரணம், நடுவில் யாரோ வந்து புகுந்தார்கள். அவர் யார் என்று பெயர் சொல்ல மாட்டேன். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. அதனால், வேண்டாம் என்று அப்போது அப்பாஸ் கூறிவிட்டார். அந்த நபர் யார் என்று ரசிகர்கள் ஆராய்ந்து பார்த்ததில் டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரம் தான் என்று தெரிவித்து வருகின்றனர்.

simran-updatenews360
  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ