1996-ம் ஆண்டு அப்பாஸ் காதல் தேசம் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு சூப்பர்ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் சாக்லேட் பாயாக வலம் வந்தார். தமிழில் கோ படத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் 2016-ம் ஆண்டு பச்சைக்கள்ளம் (மலையாளம்) படம் வெளியானது.
எராம் அலி என்னும் பேஷன் டிசைனரை கடந்த 2001-ம் ஆண்டு அப்பாஸ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அய்மான் என்னும் மகனும், எமிரா என்னும் மகளும் இருக்கின்றனர். அப்பாஸ் தற்போது குடும்பத்தாருடன் ஆக்லாந்தில் (நியூசிலாந்து) வசிக்கிறார்.
நடிகர் அப்பாஸ் முதல் படத்திலேயே புகழ் உச்சிக்கு சென்றார். இதன் பின்னர் பல வெற்றி படங்களை கொடுத்தார். தமிழ் சினிமாவில் நடிகர் அப்பாஸ் பெரிய நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், சினிமாவில் இருந்த காணாமலே போய்விட்டார். தற்போது நியூஸிலாந்தில் நடிகர் அப்பாஸ் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அப்பாஸ் இங்கிருந்து வெளிநாட்டுக்கு செல்ல காரணம் என்ன என்பது குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டியில் தெரிவித்துள்ளார். ஒரு பிரபல நடிகர் செய்த துரோகத்தால் தான் அப்பாஸ் விரத்தின் உச்சத்திற்கு சென்று இந்தியாவை விட்டு சென்றுவிட்டார்.
சிறு கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்று நடித்து வந்த அப்பாஸ் எஸ்பிபி பாலசுப்பிரமணியம் கொடுத்த அட்வைஸ் முலமாக ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை துவங்கி இருந்ததாகவும், அதன்பின் பல நிகழ்ச்சிகளை நடத்திய அப்பாஸ் எஸ்பிபி யின் நிகழ்ச்சிகளையும் நடத்தி இருக்கிறார்.
அப்படி ஒரு சமயத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே பிரச்சனைகள் இருந்ததாகவும் இரு மாநிலத்திற்கும் இடையே உறவுகள் சுமூகமாக இல்லை அப்போது அப்பாஸ் ஒரு கிரிக்கெட் போட்டியை நடத்த முடிவெடுத்து கர்நாடகாவில் இருக்கும் முன்னணி நடிகர்களை சந்தித்து சமாதானமாக பேசியிருக்கிறார்.
போட்டிகள் நடத்த நடிகர்களை ஒப்புக்கொள்ள வைத்து எல்லா ஏற்பாடுகளிலும் செய்தது அப்பாஸ் தான் என்றும், ஆனால் ஒரு பிரபல தமிழ் நடிகர் ஒருவர் அபாண்டமாக அப்பாஸ் மீது பழி சுமத்தி ஓரங்கட்டியதோடு எல்லா பொறுப்புகளையும் வெவ்வேறு மாநில நடிகர்களையும் ஒன்றிணைத்து அவரே எல்லா பெருமைகளையும் தட்டி சென்று விட்டார் என்றும், இதனால் துரோகத்தை தாங்கிக்கொள்ள முடியாத அப்பாஸ் மனம் உடைந்து நியூசிலாந்து நாட்டிற்கு சென்று குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டதாக பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.