திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான நடிகை அபிராமி தமிழ், தெலுங்கு கன்னட மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் வானவில் திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் ஆன இவர் ’விருமாண்டி’, ‘சார்லி சாப்ளின்’, ‘சமுத்திரம்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்திருக்கிறார்.

விருமாண்டி திரைப்படம் தான் வரத்து கேரியரை நிலைநிறுத்தியது. ஒரு நடிகையாக இன்றளவும் அடையாளமாக இருப்பதற்கு காரணமும் அந்த படம் தான். ஆனால், அதன் பிறகு தமிழில் பெரிய அளவில் படங்கள் நடிக்கவில்லை. இதையடுத்து தமிழில் பெரிய அளவில் படங்கள் நடிக்கவில்லை.
மேலும் படிக்க: CWC சீசன் 5-ல் ‘இந்த’ 8 பேர் கன்ஃபார்ம்.. அப்போ சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது..!
இதனால் ராகுல் பவனன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு அழகான இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் அபிராமி மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து சினிமா மீது அதிக ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

அடிக்கடி பேட்டிகளில் பங்கேற்று வரும் அபிராமி சமீபத்திய நேர்காணல் ஒன்றில், தான் சினிமாவில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறியுள்ளார். அதாவது நான் மிகவும் உயரமாக இருப்பதாக கூறி பல நடிகர்கள் என்னுடன் நடிப்பதை தவிர்த்ததால் நான் சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டேன் என கூறி வேதனைப்பட்டார். மேலும், சினிமா துறையில் நடிகைகள் உருவ கேலியை எதிர்கொள்வது போன்ற கசப்பான அனுபவம் குறித்து அபிராமி பேசியுள்ளார். இது குறித்து பேசும்போது உடனடியான விமர்சனங்களை எதிர்கொண்டு என்னுடைய உயரத்தை வைத்து கேலி செய்திருக்கிறார்கள். அதேபோல என்னுடைய தாடையும் கொஞ்ச நீளமாக இருக்க அதுவும் காரணமாக இருக்கலாம் என்று அபிராமி கூறியுள்ளார்.