ஹரி Sir’க்கு அந்த மாதிரி மெசேஜ் பண்ணிட்டு… முன்னாடி நின்னு We Want Justiceனு கத்துறாங்க – கொந்தளித்த அபிராமி!

Author: Shree
11 April 2023, 9:23 pm

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் ருக்மணி தேவி கலை கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலைகள் கற்றுத்தரப்படுகிறது.

கலாஷேத்ரா சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்றால் ஆசிரியரின் விருப்பங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பேராசிரியர்கள் கட்டாயப்படுத்துவதாகவும், பாலியல் சீண்டல்களை கொடுப்பதாகவும் அக்கல்லூரி மாணவிகள் புகார் அளித்தனர்.

ஆனால், கல்லூரி இயக்குனர் ரேவதி இராமச்சந்திரன் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த மாணவிகள் கல்லூரி வளாகத்தின் வெளியே போராட்டத்திலும் ஈடுபட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். பின்னர் இச்சம்பவம் பூதாகரமாக வெடித்தது. இன்னும் பிரச்னைக்கு தீர்வு வரவில்லை.

இந்த பிரச்சனை அக்கல்லூரியின் முன்னாள் மாணவியும் நடிகையுமான அபிராமி வெங்கடாச்சலம்,சம்மந்தப்பட்ட பேராசியர்களுக்கு ஆதரவாக பேசி மாணவர்களை பொய் சொல்லுவதக குறை கூறினார்.

இதனால் அபிராமி மோசமாக விமர்சிக்கப்பட்டார். இதுகுறித்து முதன் முறையாக பேட்டி ஒன்றில் பேசியுள்ள அவர், கலாஷேத்ரா ஹரி பத்மன் சார் பற்றி இப்படி புகார் வந்த போதே, ஒரு மாணவி சார் கவலைப்படாதீர்கள் எல்லாம் சரியாகிவிடும், நீங்கள் கொஞ்சம் உறுதியாக இருங்கள் என்று அவருக்கு ஆறுதல் மெசேஜ் அனுப்பிவிட்டு பின்னர் போராட்டத்தில் அதே பொண்ணு முன்னாடி நின்னு We Want Justice என கத்தி கூச்சலிட்டுள்ளார். ஆக, இந்த விவகாரத்தில் கலாஷேத்ரா மாணவிகள் பலி ஆடுகளாக ஆக்கப்படுகிறனர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவி குறித்த ஆடியோ ஆதாரம் ஒன்றையும் அபிராமி அந்த பேட்டியில் காட்டியுள்ளார்.

  • Ajithkumar's Vidaamuyarchi Twitter review Vidaamuyarchi Twitter review: சாதித்தாரா அஜித்குமார்? விடாமுயற்சி விமர்சனம்!