திரும்பிய பக்கமெல்லாம் மரண ஓலம்… வயநாட்டுக்காக களமிறங்கிய பிக்பாஸ் பிரபலம்..!

Author: Vignesh
1 August 2024, 10:16 am

கேரள மாநிலத்தில் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிலும், முண்டக்கை பகுதி மிகப்பெரிய அழிவை சந்தித்திருக்கிறது.

அங்கிருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால், அந்த இடத்தில் வீடுகள் இருந்த தடமே இல்லாமல் தற்போது காட்சியளிக்கிறது. அனைத்து இடங்களிலும் மண், மரங்கள் மற்றும் பாறைகளாலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

கேரள நிலச்சரிவில் சிக்கி 251 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் பாதிக்க கூடிய மக்கள் பலர் உலகின்றி தண்ணீர் இன்றி கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றன.

இந்நிலையில், பலரும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். போர்க்கால அடிப்படையில் நடைபெறும் இந்த மீட்பு பணியில் மலையாளத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 ல் மூன்றாவது இடத்தினை பெற்று கேரள மக்களின் அன்பை பெற்ற அபிஷேக் ஸ்ரீ குமார் இவர் வயநாட்டின் பாதிப்புக்குள்ளான மக்களுக்காக தன்னால் முடிந்த நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.

அந்தவகையில், உப்பும் அரிசியும் வழங்கி உள்ள அபிஷேக் ஸ்ரீகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வயநாட்டுக்காக…… வயநாட்டில் இப்போது உள்ள நிலைமையை பார்க்கும்போது நான் செய்வது ஒன்றும் இல்லை தான். ஆனால், நான் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றபோது முதன் முதலில் உப்பு இல்லாமல் சாப்பாடு சாப்பிட வேண்டியதாக போய்விட்டது.

அது இன்றைக்கும் மனதில் இருக்கின்றது. அதனால், தான் உப்பும் அரிசியும் வாங்கியுள்ளேன். மேலும், மக்கள் தாங்கள் ஆகவே, ஜாதி, மதம், இனம் கடந்து பல இடங்களில் நிவாரண பொருட்களை தன்னிச்சையாக சேகரித்து வருகின்றனர். இதனை பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் இப்போது, என்னை பெருமைமிகு மலையாள உணர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

  • Missed to act with Rajini.. Famous actress Felt! ரஜினிக்கு மகளாக நடிக்க வேண்டிய சான்ஸ்.. மண்ணை அள்ளி போட்டுட்டாங்க.. புலம்பும் நடிகை!