நடிகையுடன் காதல்? புயலை கிளப்பிய கடிதம்.. ஐஸ்வர்யா – அபிஷேக் பிரிவுக்கு காரணமா?
Author: Udayachandran RadhaKrishnan15 November 2024, 7:02 pm
பாலிவுட் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படும் விஷயத்தில் ஐஸ்வர்யா – அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்ய போகிறார்கள் என்பதுதான்.
இது உண்மையில்லை என கூறப்பட்டாலும், இருவரின் செயல்பாடுகள் கவனமாக பார்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தனித்தனியாக இருவரும் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
அபிஷேக் – ஐஸ்வர்யா பிரிவு? கடிதம் காரணமா?
சல்மான்கான் உடனான காதலை முறித்த பிறகு அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்த ஐஸ்வர்யா ராய்க்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். இன்பமாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் திடீர் விவாகரத்து பேச்சு அடிபடத்தொடங்கியது.
இதற்கெல்லாம் காரணம் அந்த ஒரே ஒரு கடிதம் தான் என கூறப்படுகிறது. அபிஷேக் பச்சனுக்கு நிம்ரத் கவுர் என்ற நடிகையுடன் காதல் என்ற செய்தி வைரலாகி வருகிறது.
தாஸ்வி என்ற படத்தில் நடித்த போது, இருவருக்கும் காதல் என்று தகவல் பரவியது. இது குறித்து நடிகை மறுத்தாலும், அபிஷேக் வாயை திறக்கவில்லை.
அமிதாப் பச்சன் எழுதிய கடிதம்தான் டிரெண்டாகி வருகிறது. அதில், நாம் அதிகமாக பேசிக் கொண்டதோ பழகியதோ இல்லை. ஆனால் தஸ்வி படத்தில் உங்கள் நடிப்பு அபாரம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதை நடிகை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்திருந்தார். தஸ்வி படத்தில் அபிஷேக் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த கடிதம் தான் தற்போது அபிஷேக் – ஐஸ்வர்யா பிரிவுக்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது.