விவாகரத்து புரளி; லைக் போட்டு கன்பார்ம் செய்த பிரபல ஜோடி; காரணமான பிரபல நடிகை,..

Author: Sudha
20 July 2024, 4:30 pm

நடிகர் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக சமீப காலமாக பாலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது. இதை இரு தரப்பும் மறுக்கவும் இல்லை,ஏற்கவும் இல்லை.

சமீபத்தில் நடைபெற்ற முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்சென்ட் திருமண விழாவில் இருவரும் தனித்தனியாக கலந்து கொண்டனர். இதனால் விவாகரத்து தகவல் உண்மைதானா என்ற சந்தேகம் ரசிகர்களிடம் ஏற்பட்டது.

இந்நிலையில் விவாகரத்து சம்பந்தப்பட்ட ஒரு பதிவுக்கு லைக் செய்துள்ளார் அமிதாப் பச்சன்.விவாகரத்து என்பது யாருக்கும் எளிதானது அல்ல. வயதான தம்பதிகள் தெருவைக் கடக்கும்போது கைகோர்த்து நிற்கும் அந்த மனதைக் கவரும் வீடியோக்களை மீண்டும் உருவாக்குவதைப் பற்றி யார் கனவு காண மாட்டார்கள்? என பதிவிட்டிருந்தது. அந்த பதிவுக்கு லைக் கொடுத்து விவாகரத்தை உறுதி செய்து விட்டாரோ என பாலிவுட் திரையுலகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இவர்களின் பிரிவுக்கு ஒரு நடிகைதான் காரணம் என சொல்லப்படுகிறது.ரேகாவும் அமிதாப் பச்சனும் முன்னாள் காதலர்கள் என்பது பலருக்கும் தெரியும். ரேகாவுக்கும் ஜெயாவுக்கும் நடக்கும் சண்டை இந்தி திரையுலகில் பலருக்கும் தெரியும். தற்போது நடிகை ரேகாவுடன் ஐஸ்வர்யா ராய் நெருக்கமாக இருப்பதே பச்சன் குடும்பத்தினருக்கு இடையேயான சண்டைக்கு காரணம் என கூறப்படுகிறது.

அதை உறுதி செய்வது போல சமீபத்தில் நடந்த ஒரு திரைவிழாவில் ஐஸ்வர்யா தனது மாமியார் ஜெயா பச்சனை சந்திக்கவில்லை. ஆனால் பழம்பெரும் நடிகை ரேகாவை சந்தித்து, ஆரத்தழுவிக் கொண்டனர். அது மட்டுமின்றி, ஒருவரையொருவர் காதுகளில் கிசுகிசுத்துக் கொண்டனர். ஐஸ்வர்யாவும் ரேகாவும் ஒன்றாக இருப்பது இது முதல் முறையல்ல. 2019 ஆம் ஆண்டில், உருது கவிஞர் கைஃபி ஆஸ்மியின் 100 வது பிறந்தநாளில், இருவரும் கைகோர்த்து நடந்தனர். இதையெல்லாம் பார்க்கும் போது நடிகை ரேகா தான் பச்சன் வீட்டின் வில்லன் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 177

    0

    0