டி, பிஸ்கெட் தான் சாப்பாடு.. காசுக்கே சிங்கி அடிக்கிறது எனக்கு தான் தெரியும் நடிகர் அபிஷேக் ஓபன் டாக்..!

Author: Vignesh
6 December 2023, 12:45 pm

தமிழ் சினிமாவில் மோகமுள் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானதாக நடிகர் அபிஷேக் ஷங்கர். அதற்கு, பிறகு 30 வருடங்கள் பல்வேறு படங்களிலும், சீரியல்களிலும் நடிக்க தொடங்கினார்.

சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியல் சினிமாவை காட்டிலும், இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. வெள்ளித்திரையில் பெரிதாக ஜொலிக்காவிட்டாலும், சின்னத்திரையில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளத்தை கொடுத்தது.

abishek shankar - updatenews360

சமீபத்தில், ஜீ தமிழில் ஒளிபரப்பான புது புது அர்த்தங்கள் தொடர் வரை அபிஷேக் ஷங்கர் பல சீரியல்களில் நடித்துள்ளார். அபிஷேக் ஷங்கர் முதல் படத்தில் நடித்து முடித்த பிறகு அந்த படம் திரைக்கு வரவே பல்வேறு பிரச்சனைகள் வந்ததாம்.

100 பிரிவியூ ஷோ போட்டாலும், ஒருவர் கூட ரிலீசுக்கு ஓகே சொல்லவில்லையாம். அந்த நேரத்தில், தான் மும்பைக்கு திருப்பி செல்ல முடியாது என்பதால் இங்கேயே ட்ரான்ஸ்லேட்டர் வேலை செய்வதாராம். ஆங்கிலம், ஹிந்தி ட்ரான்ஸ்லேட் செய்தால் தனக்கு ஒரு பக்கத்திற்கு ரூ.5 கிடைக்கும். வேலை கிடைப்பதை பொறுத்து 50 ரூபாய் வரை கூட கிடைக்கும்.

abishek shankar - updatenews360

அதை எடுத்துக் கொண்டு தியேட்டரில் படம் பார்க்க செல்வேன். டீ, பிஸ்கட் தான் அப்போதெல்லாம் தனக்கு உணவாகவும் இருந்தது. அதன்பின் மீதம் இருக்கும் காசை சேர்த்து வைப்பேன். மும்பையில் இருக்கும் காதலிக்கு வாராவாரம் ஒரு ட்ரங்க் கால் செய்ய பணம் எடுத்து வைப்பேன். நான் ஹீரோவாகி விட்டேன் என மும்பையில் உள்ளவர்கள் நினைத்தார்கள். ஆனால், நான் இங்கே காசுக்கு சிங்கி அடித்தது எனக்கு தான் தெரியும் என அபிஷேக் ஷங்கர் சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ