கங்குவா படப்பிடிப்பில் விபத்து: சூர்யா மருத்துவமனையில் அனுமதி: முக்கிய இடத்தில் காயம்..!

Author: Vignesh
24 November 2023, 8:28 am

பிரபல நடிகர் சிவகுமார் அவர்களின் மூத்த மகனான சூர்யா தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். ஆரம்பித்தில் டபுள் ஹீரோ சப்ஜெக்ட், துணை ஹீரோ போன்ற திரைக்கதைகளில் நடிக்கத் தொடங்கிய இவர், நந்தா, காக்க காக்க, பிதாமகன், மௌனம் பேசியதே போன்ற படங்களின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

விஜய், அஜித் இணையாக போட்டியாக வலம் வரும் சூர்யா, வாரணம் ஆயிரம், அயன், சிங்கம், மாற்றான் போன்ற திரைப்படங்கள் மூலம் செம பிரபலம் அடைந்தார். குறிப்பிட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், சமீபத்தில் நடித்து வெளியான ஜெய் பீம், சூரரை போற்று போன்ற படங்கள் இவரை இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது.

செலக்ட்டீவான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சூர்யா தற்போது, இயக்குனர் சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். கற்பனை கதைக்கொண்ட வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு வரும் இத்திரைப்படத்தில் திஷா பட்டாணி, யோகி பாபு, நடராஜன், ரெடின், கோவை சரளா, ரவிக்குமார் என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகின்றனர்.

பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இத்திரைப்படமானது 2024ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தை குறித்து பேசியுள்ள பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு, இப்படம் சுமார் 1500ம் ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒரு கற்பனை சம்பவமாக உருவாகி வருகிறது. போர்க்கட்சிகள் அதிகமாக உள்ள திரைப்படமாக கங்குவா எடுக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தின் கதையை இயக்குனர் சிவா 4 வருடத்திற்கு முன்னரே எழுதி விட்டாராம். அப்போவே இது சூர்யா சாருக்கு பொருத்தமான கதை என்று நினைத்து தான் முழுவதுமாக உருவாகினேன். இப்படம் நிச்சயம் ரூ. 1000 கோடி வசூல் குவிக்கும் என நம்ப முடிகிறது. சூர்யாவின் திரைபடவாழ்க்கையிலே கங்குவா மிகப்பெரிய படமாக அமையும். இப்படம் பான் இந்தியா இல்ல பான் வேர்ல்டு படமாக இருக்கும் என கூறுகிறார்கள்.

இந்த நிலையில் தான் படப்பிடிப்பில் இருந்து ஒரு ஷாக்கிங் நியூஸ் வந்துள்ளது. அதாவது திடீரென ரோப் கேமரா அறுந்து சூர்யாவின் தோள்பட்டையில் மோதியதால் காயம் ஏற்பட்டுள்ளது. பெரிய காயம் இல்லை என்றாலும் படப்பிடிப்பை இன்று ரத்து செய்துவிட்டார்களாம்.

  • ajith-sir-gives-the-title-good-bad-ugly-said-by-adhik-ravichandran டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்