கவலையை மறக்க மீனா எடுத்த அதிரடி முடிவு : கைக்கோர்த்த பிரபல நடிகை!!

Author: Udayachandran RadhaKrishnan
16 February 2023, 2:45 pm

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது கேரியரை தொடங்கியவர் நடிகை மீனா. ரஜினி, கமல், அஜித், அர்ஜுன் என முன்னணி நடிகர்களின் ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்து 80ஸ் மற்றும் 90ஸ் களில் கனவு கன்னியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் பிரபல நடிகையாக இருந்து வந்த இவர், 2009ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். தெறி படத்தில் விஜய் மகளாக நடித்து நைனிகா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். கடந்த ஆண்டு மீனாவின் கணவர் உடல்நிலை குறைவால் காலமானார்.

கணவரின் மறைவால் துக்கத்தில் இருந்த மீனா, அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார். தனது பிறந்த நாள் கொண்டாட்டம், தோழிகளுடன் வெளியே செல்வது, ஷூட்டிங் என நேரத்தை செலவிட்டு வருகிறார்.

வித்யாசாகரின் மறைவுக்கு பின் மீனா தனது கவலைகளை மறக்க வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்.

தற்போது பிரபல நடிகை சங்கவியுடன் விஷால் பாட்டுக்கு மீனா நடனமாடியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…