ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு காதல் தோல்வியா..டாப் நடிகருடன் ஓட்டம் பிடித்த காதலி.!
Author: Selvan14 February 2025, 4:57 pm
அர்ஜுனின் காதல் தோல்வி
கன்னட திரையுலகில் அறிமுகம் ஆகி தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன்,இவர் நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும்,தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.
இதையும் படியுங்க: காதலனை அறிவித்த பிக் பாஸ் ஜாக்குலின்…போட்டாவுக்கு குவியும் வாழ்த்து.!
தமிழ் சினிமாவில் நன்றி என்ற திரைப்படத்தின் மூலம் அடியெடுத்து வைத்தார்,அதன் பிறகு கடமை,நாகம்,இளமை,வேஷம்,எங்கள் குரல்,யார்,ஜெய்ஹிந்த் என பல படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.
இவர் சினிமாவில் ஆரம்ப காலத்தில் நடிகை நளினியை உருகி உருகி காதலித்து வந்துள்ளார்,காதலை அவரிடம் சரியான காலம் வரும் போது சொல்லலாம் என காத்திருந்த அர்ஜுனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது,நளினியும் நடிகர் ராமராஜனும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர்.
இந்த தகவலை அறிந்ததும் மனதளவில் மிகவும் பாதிப்படைந்தார்,ஒரு தலை காதலால் நளினியை மறக்க முடியாமல் தவித்து வந்த சூழலில்,நளினி நடிகர் ராமராஜனுடன் ஓடி சென்று கல்யாணம் செய்தார்.
அதன் பிறகு தன்னுடைய ஒருதலை காதலில் இருந்து கொஞ்சோ கொஞ்சமாக வெளியே வந்து 1988 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த நடிகை நிவேதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.