தாலி கட்டும்முன் நடிகர் ஆதி கேட்ட கேள்வி… பயத்தில் படபடத்துப்போன நிக்கி கல்ராணி – என்ன தெரியுமா?
Author: Shree25 September 2023, 5:57 pm
தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நிக்கி கல்ராணி. இவர் தமிழில் டார்லிங் என்னும் படம் மூலம் பிரபலமடைந்தார். தொடர்ந்து யாவராயினும் நா காக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்ட சிவா கெட்ட சிவா, ஹர ஹர மகாதேவி, தேவ், ராஜ வம்சம், இடியட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பிரபல நாயகியாக வலம் வருகிற இவர் தனது நீண்ட நாள் காதலரான நடிகர் ஆதி பிணிசெட்டியை திருமணம் செய்து கொண்டார். ஆதி தமிழில் மிருகம், ஈரம், அய்யனார், ஆடு புலி, அரவான், வல்லினம், கோச்சடையான், யாவராயினும் நா காக்க, மரகத நாணயம், போர் வீரன் உள்ளிட்ட படங்களின் மூலம் நடித்து பிரபலமானவர்.

இதில் யாவராயினும் நா காக்க படத்தில் ஒன்றாக நடித்த நிக்கி கல்ராணிக்கும்- ஆதிக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் ஆதி, நிக்கு கல்ராணி மீது காதல் மலர்ந்தது முதல் திருமணம் வரை பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது திருமணத்தன்று தாலிகட்டும் சில நிமிடங்களுக்கு முன், ” நிக்கி நான் உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும் என சொன்னேன்” அப்போது முகூர்த்த நேரம் நெருங்குது என அவசர அவசரமாக கூப்பிடுறாங்க. அந்த நேரத்தில் நான் இப்படி கேட்டதும் நிக்கி ” ஏன்? என்ன ஆச்சு? என பதற்றத்திலே கேட்டார்.
நான் சொன்னேன் ” சாதாரண பெண்களை போன்று புருஷன் என்றால் இப்படிதான் இருக்கவேணும். இத்தனை மணிக்கு வீட்டுக்கு வரணும். வெளியில பிரண்ட்ஸ் கூட போகக்கூடாது என்றெல்லாம் சொல்லக்கூடாது என சொன்னேன். பின்னர் அவரும் அதற்கு ஓகே சொல்லி சம்மதித்தார் என கூறினார். அத தாலி கட்டும்போது தானா கேட்கணும் என ஆங்கர் ஆதியிடம் கேட்க, அத அப்போதாங்க கேட்கணும்னு தோணுச்சு என்றார். இதோ அந்த வீடியோ: