எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது…. நான் இறந்துவிட்டேன் – நடிகர் அப்பாஸை வாட்டி எடுத்த வறுமை!
Author: Shree19 July 2023, 10:16 am
1996-ம் ஆண்டு அப்பாஸ் காதல் தேசம் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு சூப்பர்ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் சாக்லேட் பாயாக வலம் வந்தார். தமிழில் கோ படத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் 2016-ம் ஆண்டு பச்சைக்கள்ளம் (மலையாளம்) படம் வெளியானது.
நடிகர் அப்பாஸ் முதல் படத்திலேயே புகழ் உச்சிக்கு சென்றார். இதன் பின்னர் பல வெற்றி படங்களை கொடுத்தார். தமிழ் சினிமாவில் நடிகர் அப்பாஸ் பெரிய நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், சினிமாவில் இருந்த காணாமலே போய்விட்டார். தற்போது நியூஸிலாந்தில் நடிகர் அப்பாஸ் குடும்பத்துடன் வசித்து வருகிறார். எராம் அலி என்னும் பேஷன் டிசைனரை கடந்த 2001-ம் ஆண்டு அப்பாஸ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அய்மான் என்னும் மகனும், எமிரா என்னும் மகளும் இருக்கின்றனர்.

படவாய்ப்புகள் இல்லாததால் வயிற்று பிழைப்பிற்காக நியூஸிலாந்தில் பெட்ரோல் பங்க் பாத்ரூம் கிளீனர் உள்ளிட்ட வேலைகளை செய்து வருவதாக சில மாதங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். மேலும், அவர் பைக் மெக்கானிக் வேலை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகியது. பெரிய ஸ்டார் நடிகராக இருந்தவருக்கே நிலைமை இப்படி சறுக்கிவிட்டதே என பலர் வேதனை அடைந்தனர்.
இந்நிலையில் தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது சினிமா மார்க்கெட் சரிந்த சமயத்தில் பணநெருக்கடியால் தான் பட்ட அவமானங்கள் குறித்து பேசியுள்ள அப்பாஸ், ” ஆம், நான் படவாய்ப்பு இல்லாமல் இருந்தபோது தற்கொலை முயற்சி கூட செய்திருக்கிறேன். அதன் பின்னர் தான் குடும்பத்தை நினைத்து வெளிநாட்டிற்கு சென்று பிழைப்பை ஒட்டிக்கொண்டிருக்கிறேன். ஆரம்பத்தில் நியூசிலாந்து சென்றதும் மிகவும் கஷ்டமாக இருந்தது. அந்த சமயத்தில் வருமானத்திற்காக கிடைத்த எல்லா வேலைகளையும் எடுத்து செய்தேன்.
அப்போது தமிழ் சினிமாகாரர்கள் அப்பாஸ் அட்ரஸே இல்லாமல் போய்விட்டார். மேலும், எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாகவும், நான் இறந்துவிட்டதாகவும் சில தவறான வதந்திகள் செய்தியாகவே வெளியானது. அதையெல்லாம் பார்த்து மிகவும் வருத்தப்பட்டேன். தற்போது மீண்டும் என்னை நடிக்க அழைக்கிறார்கள். அப்படி நான் மீண்டும் இந்தியா வந்து படங்களில் நடித்தால் எல்லாம் சரியாகி விடும்” என தெரிவித்துள்ளார் அப்பாஸ்.