1996-ம் ஆண்டு அப்பாஸ் காதல் தேசம் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு சூப்பர்ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் சாக்லேட் பாயாக வலம் வந்தார். தமிழில் கோ படத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் 2016-ம் ஆண்டு பச்சைக்கள்ளம் (மலையாளம்) படம் வெளியானது.
எராம் அலி என்னும் பேஷன் டிசைனரை கடந்த 2001-ம் ஆண்டு அப்பாஸ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அய்மான் என்னும் மகனும், எமிரா என்னும் மகளும் இருக்கின்றனர். அப்பாஸ் தற்போது குடும்பத்தாருடன் ஆக்லாந்தில் (நியூசிலாந்து) வசிக்கிறார்.
நடிகர் அப்பாஸ் முதல் படத்திலேயே புகழ் உச்சிக்கு சென்றார். இதன் பின்னர் பல வெற்றி படங்களை கொடுத்தார். தமிழ் சினிமாவில் நடிகர் அப்பாஸ் பெரிய நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், சினிமாவில் இருந்த காணாமலே போய்விட்டார். தற்போது நியூஸிலாந்தில் நடிகர் அப்பாஸ் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
வயிற்று பிழைப்பிற்காக நியூஸிலாந்தில் பெட்ரோல் பங்க் , பாத்ரூம் கிளீனர் உள்ளிட்ட வேலைகளை செய்து வருவதாக சில மாதங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்நிலையில் அப்பாஸ் தற்போது சென்னை திரும்பியுள்ளதாக செய்திகள் வெளியானது. மேலும், அவர் நிறைய பேட்டிகளில் பல விஷயங்கள் குறித்து பகிர்ந்து வருகிறார்.
அப்போது நடிகர் கமல் ஹாசன் 2017 அல்லது 2018ம் ஆண்டு இருக்கும் என நினைக்கிறன். எனக்கு போன் செய்து பிக்பாஸில் வாய்ப்பு கொடுக்கிறோம் விருப்பமா? கலந்துக்கொள்கிறீர்களா? என கேட்டார். ஆனால் எனக்கு அந்த வீட்டின் நிபந்தனைகள் பிடிக்கவில்லை. அதுமட்டுமில்லாமல், நான் எப்படி 3 மாதம் ஒரு வீட்டில் இருக்க முடியும் என்று யோசித்து அதை வேண்டாம் என்று கமலிடம் சொல்லிவிட்டேன் என அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்…
This website uses cookies.