நான் தான் அப்பாவா…பெற்ற குழந்தையை வைத்து நடிகர் ‘அப்பாஸ்’ செய்த அதிர்ச்சி செயல்..!
Author: Selvan7 February 2025, 4:06 pm
மகன் மீது சந்தேகப்பட்ட நடிகர் அப்பாஸ்
தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் பல காதல் படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகர் அப்பாஸ்.இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படியுங்க: நான் அவருக்கு ஜோடியா…பிரபல இயக்குனர் படத்தை தூக்கி வீசிய நடிகை த்ரிஷா..!
இவர் நடித்த முதல் படமான காதல் தேசம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றி பெற்றதது,அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வந்த இவர் குறுகிய காலத்தில் சினிமாவை விட்டு விலகினார்.
![Abbas DNA test on son](https://ffebb5a0.delivery.rocketcdn.me/wp-content/uploads/2025/02/abbas2.jpg)
இந்த நிலையில் தன்னுடைய மகன் குறித்து ஒரு பேட்டியில் அதிர்ச்சிகரமான தகவலை கூறியுள்ளார்.அதாவது என்னுடைய மகன் எனக்கு தான் பிறந்தானா என்ற சந்தேகம் எனக்குள் வந்தது,அவன் மிகவும் அமைதியாக இருப்பான்,ஆனால் நான் மிகவும் ஜாலியா,கல கல-னு இருப்பேன்,என் மகன் மட்டும் எப்படி இப்படி அமைதியாக இருக்கிறான் என சந்தேகப்பட்டு அவனுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்தேன்,அதில் அவர் என்னுடைய மகன் தான் என உறுதியானது.
இதை நடிகர் அப்பாஸ் அந்த பேட்டியில் மிகவும் ஜாலியாக கூறியிருப்பார்.இதனை பார்த்த ரசிகர்கள் பலர் அதிர்ச்சியில் உறைந்தனர்.நடிகர் அப்பாஸ் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிப்பு பக்கம் திரும்பியுள்ளார்,’எக்ஸாம்ஸ்’ என்ற வெப் தொடரில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.