மம்முட்டி அலட்சியமா ஒரு லுக் விட்டார்.. ரொம்ப அசிங்கமாயிருச்சு – பிரபல நடிகர் ஓபன் டாக்..!

Author: Vignesh
9 December 2023, 6:20 pm

1996-ம் ஆண்டு அப்பாஸ் காதல் தேசம் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு சூப்பர்ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் சாக்லேட் பாயாக வலம் வந்தார். தமிழில் கோ படத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் 2016-ம் ஆண்டு பச்சைக்கள்ளம் (மலையாளம்) படம் வெளியானது.

நடிகர் அப்பாஸ் முதல் படத்திலேயே புகழ் உச்சிக்கு சென்றார். இதன் பின்னர் பல வெற்றி படங்களை கொடுத்தார். தமிழ் சினிமாவில் நடிகர் அப்பாஸ் பெரிய நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், சினிமாவில் இருந்த காணாமலே போய்விட்டார். தற்போது நியூஸிலாந்தில் நடிகர் அப்பாஸ் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

abbas-updatenews360

எராம் அலி என்னும் பேஷன் டிசைனரை கடந்த 2001-ம் ஆண்டு அப்பாஸ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அய்மான் என்னும் மகனும், எமிரா என்னும் மகளும் இருக்கின்றனர். அப்பாஸ் தற்போது குடும்பத்தாருடன் ஆக்லாந்தில் (நியூசிலாந்து) வசிக்கிறார்.

abbas-updatenews360

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் அப்பாஸ் நடிகர் மம்முட்டியுடன் நடித்த அனுபவங்கள் குறித்து பேசி உள்ளார். அதில் அவர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஒரு காட்சியில் மம்முட்டியுடன் நடிக்க வேண்டி இருந்தது. அவர் சீனியர் நடிகர் என்பதால் முதலிலேயே பயம் வந்துவிட்டது அதோடு, அந்த பயத்தோடு நான் சரியாக நடிக்கவில்லை. இதை பார்த்த மம்மூட்டி என்னை பார்த்து அலட்சியமாக ஒரு லுக் விட்டார்.

abbas-updatenews360

அது எனக்கு ரொம்பவுமே அசிங்கமாகிவிட்டது. அதன் பிறகு ரொம்பவுமே கஷ்டப்பட்டு அந்த சீனில் நடித்தேன். ஆனால், ஆனந்தம் படத்தில் நடித்த போது மம்முட்டியுடன் நெருங்கி பழகி விட்டேன். நான் மம்முட்டி, முரளி அண்ணா மூவரும் படப்பிடிப்பு முடிந்ததும் ஒன்றாக விளையாட செல்வோம் என அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 314

    0

    0