வறுமையின் கோரப்பிடியில் நடிகர் அப்பாஸ்… பாவம் நிலைமை இப்படி ஆகிப்போச்சே… இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்க!

Author: Shree
24 May 2023, 9:07 am

1996-ம் ஆண்டு அப்பாஸ் காதல் தேசம் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு சூப்பர்ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் சாக்லேட் பாயாக வலம் வந்தார். தமிழில் கோ படத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் 2016-ம் ஆண்டு பச்சைக்கள்ளம் (மலையாளம்) படம் வெளியானது.

எராம் அலி என்னும் பேஷன் டிசைனரை கடந்த 2001-ம் ஆண்டு அப்பாஸ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அய்மான் என்னும் மகனும், எமிரா என்னும் மகளும் இருக்கின்றனர். அப்பாஸ் தற்போது குடும்பத்தாருடன் ஆக்லாந்தில் (நியூசிலாந்து) வசிக்கிறார்.

நடிகர் அப்பாஸ் முதல் படத்திலேயே புகழ் உச்சிக்கு சென்றார். இதன் பின்னர் பல வெற்றி படங்களை கொடுத்தார். தமிழ் சினிமாவில் நடிகர் அப்பாஸ் பெரிய நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், சினிமாவில் இருந்த காணாமலே போய்விட்டார். தற்போது நியூஸிலாந்தில் நடிகர் அப்பாஸ் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

வயிற்று பிழைப்பிற்காக நியூஸிலாந்தில் பெட்ரோல் பங்க் , பாத்ரூம் கிளீனர் உள்ளிட்ட வேலைகளை செய்து வருவதாக சில மாதங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்நிலையில் அப்பாஸ் தற்போது பைக் மெக்கானிக் வேலை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பெரிய ஸ்டார் நடிகராக இருந்தவருக்கே நிலைமை இப்படி சறுக்கிவிட்டதே என பலர் வேதனை அடைந்துள்ளனர்.

  • Dil Raju and Ram Charan collaboration கேம் சேஞ்சர் தோல்வி: ராம் சரணின் நெகிழ்ச்சி செயல்…மகிழ்ச்சியில் தில் ராஜு..!