அஜித்தின் அண்ணனா இது? தோற்றத்தில் தல மாதிரியே இருக்காரே – வைரல் புகைப்படம்!

Author: Rajesh
19 February 2024, 3:33 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் மலையாள திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பின்னர் தமிழ் படங்களில் தொடர்ச்சியாக நடித்து இன்று தவிர்க்க முடியாக நடிகராக இருந்து வருகிறார். காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல அட்டகாசமான படங்களில் நடித்துள்ளார்.

படத்திற்கு படம் தனது மாஸான நடிப்பை வெளிப்படுத்தி கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார். அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்று அவரை ரசிகர்கள் அன்போடு அழைக்கிறார்கள். திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டும் அல்லாமல் பைக் ரேஸ் , கார் ரேஸ் உள்ளிட்டவற்றில் தனது ஆர்வத்தை செலுத்தி வருகிறார்.

திரைப்படங்களில் நடித்துக்கொண்டே வேர்ல்டு டூர் சென்று வரும் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அஜித் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் அண்ணன் இவர் தான் என்று கூறி புகைப்படம் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. அஜித்துடன் பிறந்தவர்கள் மொத்தம் மூன்று பேர். அனுப் குமார், அணில் குமார் என இரண்டு சகோதர்கள் உள்ளனர். அணில் குமார் தொழிலதிபராகவும் அனுப் குமார் இன்வெஸ்டர் ஆகவும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அணில் குமார் முகஜாடையில் அஜித் போன்றே இருப்பதாக பலர் கூறி வருகின்றனர்.

  • Viveks Twin Daughterநடிகர் விவேக்கிற்கு பிறந்த இரட்டை குழந்தைகள்.. வெகு நாள் கழித்து வெளியான உண்மை!
  • Views: - 417

    0

    0