விஜய் போலவே இனி ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க போகும் அஜித்: ஷாக்கிங் அப்டேட் இதோ..!

Author: Udayachandran RadhaKrishnan
26 January 2023, 8:00 pm

தமிழ் திரையுலகில் டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் வெளியாகி விமர்சனத்திலும் வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியாகி திரையரங்குகள் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அஜித் தனது ரசிகர்களுக்காக கொள்கையை தளர்த்திக்கொள்ள முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. பல வருடங்களாக, எந்த ஒரு திரைப்பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும், பேட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்து வந்த இவர், இனிமேல் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கப் போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் கூட தனது மேனேஜர் வாயிலாக தான் பேசி வருகிறார்.

Vijay - Updatenews360

இனி, எப்பொழுதும் போல நேரடியாக சந்திக்காமல் தனது மேனேஜர் மூலமாகவோ அல்லது நெருங்கிய வட்டாரங்கள் மூலமாகவோ ரசிகர்களுடம் தொடர்பில் இருக்கப் போவதாக கூறப்படுகிறது. ரசிகர் மன்றம் கலைத்ததில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஆனால் ரசிகர்களுக்கு தேவையான உதவிகள் என்னென்ன வேண்டும் என்பதை தனது நெருங்கிய நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டு அதன் மூலம் ரசிகர்களின் தேவையை பூர்த்தி செய்யப்போவதாக சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ajith - vijay - updatenews360

ஒரு வழியாக இது மட்டும் நடந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், துணிவு படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவர் உயிரிழந்தது அஜித்தை மிகவும் காயப்படுத்தியதாகவும் அதனால் இனிமேலும் ரசிகர்களை பார்க்காமல் இருப்பது தவறு என்றும் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ