செமையான புதிய லுக்கில் ஏர்போர்ட்டை கலக்கிய அஜித்.. AK62வின் புதிய லுக்கா இருக்குமோ..? வைரலாகும் புகைப்படம்..!

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2023, 12:48 pm

போனிகபூர் – அஜித்குமார்- H.வினோத் கூட்டணியில் மூன்றாவது திரைப்படமாக உருவாகி திரையரங்குகளில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வரும் திரைப்படம் ‘துணிவு’. பொங்கலை முன்னிட்டு கடந்த 11ம் தேதி வெளியானது. மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

துணிவு படத்தை தொடர்ந்து, நடிகர் அஜித்தின் 62வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக முன்னதாகவே அறிவிப்பு வெளியானது. அனிருத் இசையில், லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் 10ம் தேதி முதல் மும்பையில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

AK62 படத்தின் டிஜிட்டல் ஒடிடி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு துவங்கும் முன்பே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் டிஜிட்டல் உரிமம் விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகர் அஜித் சென்னை விமான நிலையத்திற்கு வந்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. நடிகர் அஜித்குமார் விமான நிலையத்தில் ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்களில் நடிகர் அஜித் அவர்கள் புது லுக்கில் இருப்பது தெரிகிறது. இது ஆரம்பம், வீரம் படங்களில் உள்ளது போல் இருப்பதாக சில ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 2578

    150

    19