பொன்னியின் செல்வன், KGF 2 வசூலை முறியடித்து பிரம்மாண்ட வசூல் செய்து முதலிடத்தை பிடித்த துணிவு..!

Author: Udayachandran RadhaKrishnan
27 January 2023, 9:55 am

போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் துணிவு. மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர், அமீர், பாவனி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் திரையுலகில் அஜித் – விஜய் திரைப்படங்கள் ஒன்றாக வெளியானாலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருக்கும். அப்படி இருந்தும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது துணிவு திரைப்படம்.

இந்நிலையில், துணிவு படம் தஞ்சாவூரில் உள்ள ஜிவி திரையரங்கில் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது. 38 வருடங்களில் அதிகம் வசூல் செய்து முதலிடத்தை துணிவு திரைப்படம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பொன்னியின் செல்வன், கே ஜி எப் 2 ஆகிய படங்களின் வசூலையும் முறியடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 579

    2

    0