‘டூப்‘ போடாமா அஜித் இறங்கி செய்த செயல்… ரசிகர்களை நெகிழ வைத்த H.வினோத்..!
Author: Udayachandran RadhaKrishnan9 December 2022, 4:50 pm
தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை, வலிமை, நேர்கொண்ட பார்வை போன்ற பிரபல தமிழ் திரைப்படங்களை இயக்கியவர் எச் வினோத். வலிமை மற்றும் நேர்கொண்ட பார்வை படங்களைத் தொடர்ந்து, 3வது முறையாக அஜித் – எச்.வினோத் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் துணிவு.
அஜித், மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் இத்திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிக்காக, இப்படத்தின் இயக்குனர் பல பெட்டிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், இயக்குநர் அளித்துள்ள பேட்டியில், துணிவு படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பஞ்சாப் வங்கிக் கொள்ளை உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. இந்த தகவல் உண்மையில்லை, துணிவு படத்தின் கதை ஒரு கற்பனைக்கதை.
துணிவுத் திரைப்படத்தை குடும்பத்தோடு அனைவரும் ரசித்து பார்க்கும் வகையில் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். பல அதிரடியான சண்டை காட்சிகளில் அஜித் டூப் போடாமல் நடித்துள்ளார். சண்டை காட்சியின் போது அவரது முட்டி வீங்கி விட்டது, ஆனால், அந்த வலியையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து 55 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அதே போல படத்தின் நாயகியாக வரும் மஞ்சு வாரியர் அஜித்தின் காதலி இல்லை, அவர் அஜித் குழுவில் ஒருவராக நடித்துள்ளார்.
அஜித்துடன் பணியாற்றியது இனிய அனுபவம். எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும், சக மனிதர்களை எப்படி மதிப்பது, விமர்சனங்களை காதில் போட்டுக்கொள்ளாமல் இருப்பது எப்படி, என்பதை அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். துணிவுத் திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும், அவரது ரசிகர்களை கவரும் வகையில் சுவாரஸ்யமான பல காட்சிகள் உள்ளது’ என கூறியுள்ளார்.