சத்தம் இல்லாமல் இவ்வளோவ் பெரிய காரியத்தை செய்கிறாரா அஜித்… கத்துக்கோங்க Mister சூர்யா!

Author: Shree
28 September 2023, 3:28 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தல அஜித். இவர் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஹீரோவாக பார்க்கப்படுகிறார். மற்ற நடிகர்களை போன்று படங்களில் நடித்துவிட்டு அதை வித விதமாய் ப்ரோமோஷன் செய்வதெல்லாம் அஜித்திற்கு சுத்தமாக பிடிக்காத ஒன்று. பொய்யாக வியாபாரம் செய்து மக்களை ஏமாற்றி படம் பார்க்க வைத்து தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுக்கவே மாட்டார்.

திரைப்படங்களில் நடிப்பதோடு சரி அதன் பின்னர் எந்த ஒரு நிகழ்ச்சிக்கோ, நேர்காணலுக்கோ, பொது விழாக்களிலோ அஜித்தை பார்க்கவே முடியாது. ஒரு படம் முடித்துவிட்டால் ட்ரிப் சென்றுவிடுவார். இல்லையெனில் துப்பாக்கி சுடுதல், பைக் ரேஸ் , கார் ரேஸ் ட்ரோன் ஆராய்ச்சி உள்ளிட்டவற்றில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு செல்வது தான் அஜித்தின் வழக்கமான பழக்கங்களில் ஒன்றாக பார்க்கிறோம். படங்களில் நடிப்பதோடு சரி அதன் பிறகு எந்த ஒரு பப்ளிசிட்டியையும் விரும்பாத சாதாரண மனிதராகவே நடந்துக்கொள்வார்.

மொத்தத்தில் மிகச்சிறந்த நடிகராகவும், மிகச்சிறந்த மனிதராகவும் பார்க்கப்படும் அஜித் எந்த ஒரு சினிமா பேக்ரவுண்டும் இல்லாமல் படத்திற்கு படம் தனது திறமையை காட்டி வாழ்க்கையை செதுக்கி செதுக்கி உருவாக்கினார். நேர்மையாக உழைத்து சம்பாதித்து வைத்திருக்கும் அஜித் குறித்து இதுவரை யாருக்கும் தெரியாத விஷயம் ஒன்று கசிந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

அதாவது, நடிகர் அஜித்குமாருக்கு சொந்தமாக மோகினி மணி பவுண்டேஷன் என்ற இயலாதோருக்கு உதவிகள் செய்யும் NGO நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறாராம். அதாவது தன்னுடைய அம்மா மோகினி மற்றும் அப்பா சுப்ரமணி பெயரை இணைத்து மோகினி மணி என இந்த பவுண்டேஷனை தொடங்கி இருக்கிறார் அஜித்.

இந்நிறுவனம் அரசாங்கத்திடமிருந்து எந்த உதவியும் பெறாமல் முதியோர்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனம். அஜித்தின் சம்பளத்தில் ஒரு பாதி அமௌண்ட் இந்நிறுவனத்திற்கு சென்றுவிடுகிறதாம். அவ்வப்போது தனது குடும்பத்துடன் சென்று அங்கு உதவிகள் செய்தாலும் அது வெளியில் தெரிவதே இல்லை. உதவி செய்வதை விளம்பர படுத்தாமல் செய்யும் அஜித்தின் இந்த குணத்தை பார்த்து சூர்யா கற்றுக்கொள்ளவேண்டும் அஜித் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!