விமான நிலையத்தில் அதை கேட்டு தொந்தரவு செய்த ரசிகர்… கடுப்பாகி திட்டிவிட்ட அஜித் – கவனம் ஈர்க்கும் வீடியோ!
Author: Shree24 August 2023, 4:32 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தல அஜித். இவர் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஹீரோவாக பார்க்கப்படுகிறார். மற்ற நடிகர்களை போன்று படங்களில் நடித்துவிட்டு அதை வித விதமாய் ப்ரோமோஷன் செய்வதெல்லாம் அஜித்திற்கு சுத்தமாக பிடிக்காத ஒன்று. பொய்யாக வியாபாரம் செய்து மக்களை ஏமாற்றி படம் பார்க்க வைத்து தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுக்கவே மாட்டார்.
திரைப்படங்களில் நடிப்பதோடு சரி அதன் பின்னர் எந்த ஒரு நிகழ்ச்சிக்கோ, நேர்காணலுக்கோ, பொது விழாக்களிலோ அஜித்தை பார்க்கவே முடியாது. ஒரு படம் முடித்துவிட்டால் ட்ரிப் சென்றுவிடுவார். இல்லையெனில் துப்பாக்கி சுடுதல், பைக் ரேஸ் , கார் ரேஸ் ட்ரோன் ஆராய்ச்சி உள்ளிட்டவற்றில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு செல்வது தான் அஜித்தின் வழக்கமான பழக்கங்களில் ஒன்றாக பார்க்கிறோம்.
படங்களில் நடிப்பதோடு சரி அதன் பிறகு எந்த ஒரு பப்ளிசிட்டியையும் விரும்பாத சாதாரண மனிதராகவே நடந்துக்கொள்வார். ரசிகர்கள் கூட அவசியமில்லாமல் தொந்தரவு செய்யும் வகையில் போட்டோ எடுப்பது… தனக்காக கூட்டம் கூடுவது அதனால் மற்றவர்களுக்கு தொல்லையாக இருக்கும் என பொது இடங்களில் தன் ரசிகர்களை கூட அறவே தவிர்ப்பார்.
அந்தவகையில் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆம், சென்னை விமான நிலையத்தில் அஜித்தை பார்த்த ரசிகர்கள் கூட்டமாக ஓடிவந்து முந்தியடித்து அவருடன் போட்டோ எடுக்க முயற்சித்தனர். ஆனால் அஜித் நிற்காமல் விறுவிறுவென நடந்துச்சென்றுவிட்டார். அப்படியும் பின்தொடர்ந்து தொந்தரவு செய்த ரசிகர் ஒருவரை அஜித் திட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்து செல்லும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
THALA Ajith Back To Chennai 🔥
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) August 23, 2023
Let's hope for the Best Update Regarding the movie #VidaaMuyarchi 😎#WelcomeBackAK || #AjithKumar pic.twitter.com/BWx1JRxsC5