“இந்த விஷயத்துல அஜித்த அடிச்சுக்க ஆளே கிடையாது”.. மீண்டும் நிரூபித்த ”AK”… துணிவு பட நடிகர் நெகிழ்ச்சி..!
Author: Vignesh30 January 2023, 12:30 pm
கடந்த 11ம் தேதி பொங்கல் விருந்தாக வெளிவந்த துணிவு திரைப்படம் மக்கள் அமோக வரவேற்பினை பெற்று மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
எச். வினோத் – அஜித் கூட்டணியில் மூன்றாவது வெளிவந்த இப்படம் வசூலில் தொடர் சாதனைகளை புரிந்து வருகிறது.தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவிலும் எதிர்பார்த்ததை விட வசூல் குவித்து வருகிறதாம் துணிவு.
இந்நிலையில், வேதாளம் படத்திற்கு பிறகு கேரளாவில் அஜித்துக்கு ஹிட் படமாக துணிவு அமைந்துள்ளது என தெரியவந்துள்ளது. இதுமட்டுமின்றி உலகளவில் ரூ. 20 கோடிக்கும் மேல் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்துள்ளாதாம் துணிவு. இதுவே துணிவு படத்திற்கு மாபெரும் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அஜித் குறித்து சில நெகிழ்ச்சி தருணங்களை துணிவு படத்தில் அவருடன் இணைந்து நடித்த நடிகர் பிரேம், வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதாவது நடிகர் சங்க நிகழ்ச்சிக்கு தனது மனைவி ஷாலினியுடன் அஜித் காரில் வந்திருந்த போது, திடீரென அவரைப் பார்க்க பத்திரிக்கையாளர் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் சூழ்ந்து கொண்ட நிலையில், காரில் இருந்து இறங்கி, அந்தப் பக்கம் சென்று மனைவிக்காக காரை திறந்து, கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார் என தெரிவித்தார்.
உண்மையிலேயே இதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம் என்றும், அதன் பிறகு தன்னுடைய மனைவி ஒருநாள், அஜித்தை பார்ப்பதற்காக வெளியூரிலிருந்து வருவதாக சொன்னார்.
அதை தான் அஜித்திடம் சொன்ன போது, அவங்க எப்ப வருவாங்க? பத்திரமா வந்துருவாங்களா? என அடிக்கடி தன்னிடம் வந்து கேட்டதாகவும், இதெல்லாம் நினைச்சு பார்த்தா தனக்கு ரொம்ப பெருமையா இருக்கு எனவும், உண்மையிலேயே caring விஷயத்தில் அஜித் சாரை அடித்துக் கொள்ள யாருமே கிடையாது என மிகவும் பெருமையுடன் நடிகர் பிரேம் தெரிவித்துள்ளார்.