குளிருக்கு இதமாக Non-Veg உடன் ரெண்டு பெக் போடும் அஜித்.. மண்டையை பிய்த்துக்கொள்ளும் மகிழ் திருமேனி..!

Author: Vignesh
26 December 2023, 6:16 pm

அஜித் தற்போது பிரம்மாண்ட தாயரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார். முதலில் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால், அவரது கதை அஜித்துக்கு பிடிக்காததால் லைகா நிறுவனத்திடம் சொல்லி அவரை நீக்க சொன்னார். பின்னர் மகழ் திருமேனியின் கதை அவருக்கு பிடித்துப்போக அவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.

இப்படம் ஆரம்பிக்கப்பட்டு 3 மாதங்களாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியில் இருந்தனர். படத்தை மகிழ் திருமேனி தான் இயக்குகிறாரா?என்பதே பலருக்கும் சந்தேகம் வந்துவிட்டது. பின்னர் அஜித்தின் பிறந்தநாள் அன்று AK 62 டைட்டில் நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியாகியது. அதன்படி “விடாமுயற்சி”என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ajith-updatenews360

அஜர்பைஜான் நாட்டில் தற்போது, தட்பவெப்ப நிலை மிகவும் மோசமாக உள்ளது. இரவு நேரங்களில் கடுமையான குளிர் ஏற்பட்டு வருகிறது. இதனால் அஜித் குமார் படப்பிடிப்பை பகல் நேரங்களில் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள் என இயக்குனர் மகிழ்திருமேனியிடம் சொல்லிவிட்டாராம். அஜித் மற்றும் த்ரிஷா எடுக்கும் பிரேக் பகல் நேர சூட்டிங் என மண்டையை பிடித்துக் கொள்கிறார் இயக்குனர் மகிழ்திருமேனி. மேலும், நடிகர் அஜித் ஏற்கனவே குளிருக்கு இதமாக படக்குழுவினருக்கு நான் வெஜ் சமைத்துக் கொடுக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலானது. இதை தொடர்ந்து அந்த நாட்டில் நிலவும் குளிரை சமாளிக்க நான் வெஜுடன் சேர்த்து பாட்டிலும் கையுமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், தினமும் குளிரை சமாளிக்க அஜித் இரண்டு பெக் போட்டுக்கொண்டு அஜர்பைஜானில் சந்தோஷமாக இருந்து வருகிறாராம்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ