கிளைமாக்ஸ்’ல அந்த சீன் எல்லாமே உண்மை தான் VFX இல்ல: பிரமிக்க வைக்கும் துணிவு பட ஷூட்டிங் வீடியோ வீடியோ..!

Author: Rajesh
11 February 2023, 11:55 am

போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் துணிவு. மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர், அமீர், பாவனி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ajith -updatenews360

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் திரையுலகில் அஜித் – விஜய் திரைப்படங்கள் ஒன்றாக வெளியானாலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருக்கும். இதுவரை ரூ. 260 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், துணிவு திரைப்படத்தில் இடம்பெற்ற கிளைமாக்ஸ் காட்சி குறித்து பிரம்மிக்க வைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது படத்தில் பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் மற்றும் சில விஷயங்கள் VFX என கூறப்பட்டு வந்த நிலையில், படப்பிடிப்பில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது.

thunivu-updatenews360 3

ரவீந்தர் எனும் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் விஸ்வநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் துணிவு படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பில் ஹெலிகாப்டரில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். இதன்முலம் அவை VFX இல்லை, உண்மையாகவே எடுக்கப்பட்ட காட்சி என தெரியவந்துள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!