அஜித்தின் அடுத்த படம் ட்ராப்? விக்னேஷ் சிவன் மீது திடீர் கோபம் : வெளியான அதிர்ச்சி காரணம்..!

Author: Udayachandran RadhaKrishnan
26 January 2023, 6:00 pm

தமிழ் திரையுலகில் டாப் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படம் துணிவு. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரையிட்ட இடமெல்லாம் வசூல் மழை பொழிந்து வருகிறது.

Ajith - Updatenews360

இப்படத்தை தொடர்ந்து, அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் AK62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். அப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.190 கோடி என கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க தாமதம் ஏற்பட்டு வருவது குறித்து நிறைய தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், கதையில் அஜித் பல கரேக்‌ஷன் சொல்கிறாராம். கடந்த வாரம் கூட கதையை படித்துவிட்டு இதை மாற்று, அதை மாற்று என சொல்லி அனுப்பிவிட்டாதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…