ஷாலினி மடியில் அமர்ந்திருக்கும் AK.. கட்டிப்பிடித்தபடி ஷாலினி.. வைரலாகும் ரொமான்டிக் Photo..!

Author: Udayachandran RadhaKrishnan
15 January 2023, 11:00 am

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் அண்மையில் திரையரங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் துணிவு. முதல் நாளில் இருந்து பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்து வருகிறது. இப்படத்தை தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் திரைப்படம் ஏகே 62.

ajith - updatenews360

இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ளது. இந்நிலையில், நடிகர் அஜித் தனது மனைவி மற்றும் நடிகையுமான ஷாலினி உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தீயாக பரவி வருகிறது. கடந்த 2000ம் ஆண்டு, நட்சத்திர ஜோடியான அஜித் – ஷாலினி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 1 மகளும், 1 மகனும் உள்ளனர்.

அவ்வப்போது, இவர்களது திருமண நாள் அல்லது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் போன்ற நிகழ்வுகளின் போது எடுக்கப்படும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆவதும் ட்ரெண்ட் ஆவதும் வழக்கம். திருஷ்டி சுத்தி போடும் அளவிற்கு இந்த ஜோடியின் சில ரொமான்டிக் புகைப்படங்கள் வைரல் ஆகும்.

ஆனால், தற்போது, ரசிகர்கள் பலரும் பார்த்திராத அஜித் – ஷாலினியின் அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. பல வருடங்கள் முன்பு எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படத்தில் மனைவி ஷாலினி மடியில் அஜித் அமர்ந்திருப்பது போலவும், அஜித்தை ஷாலினி கட்டிப்பிடித்திருப்பது போலவும் உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், அழகிய ஜோடி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 919

    24

    6