முதல்வரை இழிவுபடுத்தும் ‘வியூகம்’… நடிகர் அஜ்மல் படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்..!
Author: Vignesh30 December 2023, 6:36 pm
இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நடிகர் அஜ்மல் நடிப்பில் உருவாகியுள்ள படம் வியூகம். இப்படம், பிரபல அரசியல்வாதியான ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில், ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் நடிகர் பவன் கல்யாண் ஆகியோரின் கதாபாத்திரங்களும் இடம்பெற்றுள்ளன. இதில், இருவரையும் இழிவுபடுத்தும் விதமாக பட காட்சிகள் அமைந்திருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வியூகம் படத்தை தடை செய்ய வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு வழக்கும் தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வியூகம் படத்திற்கு ஜனவரி 15ஆம் தேதி வரை படத்தை திரையிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த திரைப்படம் நேற்று திரையரங்கில் ரிலீஸ் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் வியூகம் படத்தின் போஸ்டர்களை தீ வைத்து எரித்தனர். ஃபிலிம் நகரில் உள்ள ராம் கோபால் வர்மாவின் அலுவலகத்தில் நுழைந்து பொருட்களையும் சேதப்படுத்தி உள்ளனர்.