டெரர் வில்லனாக மிரட்டிய ஆனந்தராஜின் அழகான மகளா இது? Next Heroine Ready..!
Author: Vignesh24 January 2024, 2:50 pm
பொதுவாக தமிழ் திரை உலகின் வில்லன் என்று பட்டியலை எடுத்து பார்த்தால் டாப் 10 நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஆனந்தராஜ். முரட்டு வில்லனாக இருந்து ரஜினிகாந்த், சரத்குமார், விஜயகாந்த் என பல முன்னணி நட்சத்திரங்களுக்கு வில்லனாக நடித்திருந்தார்.
90 கிட்ஸ் மத்தியில் வில்லனாக மிரட்டிய ஆனந்தராஜ் இன்று நகைச்சுவை நடிகராக தற்போது, வலம் வருகிறார். நானும் ரவுடிதான், மரகத நாணயம், தில்லுக்குதுட்டு, ஜாக்பாட், காஞ்சுரிங் கண்ணப்பா ஆகிய படங்களில் நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்தி பட்டையை கிளம்பி வருகிறார் என்றே சொல்லலாம்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென்னிந்திய அளவில் பல திரையுலகில் நடித்துள்ளார். தனது திரை வாழ்க்கையின் முதல் பாதி வில்லனாகவும், இரண்டாம் பாதியில் நகைச்சுவை நடிகராகவும் ஆனந்தராஜ் தற்போது கலக்கி வருகிறார்.
இந்நிலையில், அவரது புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் ஆனந்தராஜ் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் தற்போது வைரலான நிலையில், ஆனந்தராஜின் மகளைப் பார்த்த பலரும் அடுத்த ஹீரோயின் ரெடி பா என்று கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர்.