சில்க் ஸ்மிதா இறந்த அன்று அப்படி நடந்திருக்கும்.. சீக்ரெட்டை வெளியிட்ட ஆனந்த்ராஜ்..!

Author: Vignesh
24 July 2024, 1:24 pm

இந்திய சினிமாவின் மர்லின் மன்ட்ரோ என்று புகழப்பட்ட நடிகை சில்க் ஸ்மிதா செல்லுலாய்டு முதல் டிஜிட்டல் வரையிலான இந்திய சினிமா வரலாற்றில் தன்னுடைய இடத்தை வேறொரு நடிகையால் நிரப்ப முடியாத படிக்கு ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறார். 1970களில் ஒரு ஒப்பனைக் கலைஞராக திரைத்துறையில் வாழ்க்கையை துவங்கிய இவர் தமிழ் நடிகர் வினுசக்கரவர்த்தியால் வண்டிச்சக்கரம் என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தினார்.

silk smitha - updatenews360

மேலும் படிக்க: எனக்கு பிடிக்கல நான் ரொம்ப பிசி.. பாகுபலி படத்தில் நடிக்க மறுத்த தமிழ் நடிகர்..!

அந்தப் பெயரே, இவருக்கு சினிமாவில் நிலைத்துவிட்டது. இவரது 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 450-ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு விதமான கிளாமரான காட்சிகளில் நடித்தார். இவரது மரணம் இன்னும் மர்மமாகவே இருக்கிறது.

இந்நிலையில், பொதுவாக சில்க் ஸ்மிதா நினைவு நாள் மற்றும் பிறந்தநாள் வரும்போது எல்லாம் அவரைப் பற்றிய சில விஷயங்களை பிரபலங்கள் பகிர்ந்து வருவது வழக்கம். அப்படி நடிகர் ஆனந்தராஜ் நடிகை சில்க் ஸ்மிதா பற்றி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர், சில்க் எனக்கு நல்ல தோழியாக இருந்தார். Dirty Picture படத்தில் சில்க் பற்றி நிறைய விஷயங்கள் காட்டப்படவில்லை. அந்த படம் எடுக்கும் முன்பு என்னிடம் கேட்டிருந்தால், நான் இன்னும் சில விஷயங்களை கூறியிருப்பேன்.

silk smitha - updatenews360 d

சில்க் ஸ்மிதா இறப்பதற்கு ஒரு நாள் முன்னர் நான் ஒரு கன்னட படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்தேன். அந்த படத்தில் ஒரு ஐட்டம் பாடல் இருப்பதாக சொன்னார்கள். அதில், சில்க் ஸ்மிதாவை ஆட வைக்கலாம் என்று பரிந்துரை செய்தேன். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். அந்த பாடல் படமாக்க திட்டமிடப்பட்டிருந்த நாளில் தான் சில்க் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வந்தது. அதைக் கேட்டு ஒட்டுமொத்த பட குழுவும் அதிர்ந்து போய் விட்டோம். படப்பிடிப்பையும் நிறுத்திவிட்டோம் என அதில் அவர் கூறியிருந்தார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 207

    0

    0