பிரபல ஹீரோயினை காதலித்த நடிகர் ஆனந்தராஜ்.. வெளியான ஒன் சைடு லவ் ஸ்டோரி..!

Author: Vignesh
27 ஜூன் 2024, 11:48 காலை
anandraj
Quick Share

பொதுவாக தமிழ் திரை உலகின் வில்லன் என்று பட்டியலை எடுத்து பார்த்தால் டாப் 10 நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஆனந்தராஜ். முரட்டு வில்லனாக இருந்து ரஜினிகாந்த், சரத்குமார், விஜயகாந்த் என பல முன்னணி நட்சத்திரங்களுக்கு வில்லனாக நடித்திருந்தார். 90 கிட்ஸ் மத்தியில் வில்லனாக மிரட்டிய ஆனந்தராஜ் இன்று நகைச்சுவை நடிகராக தற்போது, வலம் வருகிறார். நானும் ரவுடிதான், மரகத நாணயம், தில்லுக்குதுட்டு, ஜாக்பாட், காஞ்சுரிங் கண்ணப்பா ஆகிய படங்களில் நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்தி பட்டையை கிளம்பி வருகிறார் என்றே சொல்லலாம்.

anandraj

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென்னிந்திய அளவில் பல திரையுலகில் நடித்துள்ளார். தனது திரை வாழ்க்கையின் முதல் பாதி வில்லனாகவும், இரண்டாம் பாதியில் நகைச்சுவை நடிகராகவும் ஆனந்தராஜ் தற்போது கலக்கி வருகிறார்.

anandraj

இந்நிலையில், சினிமாவில் வில்லத்தனமாக நடித்த ஆனந்தராஜுக்கும் ஒரு காதல் இருந்துள்ளது. அதாவது, ஒன் சைட் காதல் சென்னை தாமிரபரணி பகுதியில் இருந்த நடிப்பு கல்லூரிக்கு நடந்தே செல்வா ராம் ஆனந்தராஜ். அந்த கல்லூரியின், அருகே ஒரு கேட்டரிங் பயிற்சி கல்லூரி இருந்துள்ளது. அதில், சைனா பட்லர் பெண் போல ஒருவர் படித்து வந்தார். அவர் முன்னே நடந்து போக அவரை சைட் அடித்துக் கொண்டே பின்னால் போவாராம் ஆனந்தராஜ்.

jayasri

அவரிடம் பேச வேண்டும் என மனதிற்குள் ஆசை ஆனால், தைரியம் வரவில்லையாம். ஒரு நாள் இயக்குனர் ஸ்ரீதர் நடிப்பு கல்லூரிக்கு வர ஆர்வத்துடன் காத்திருந்தார் ஆனந்தராஜ். ஆனால், அவர் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை. அருகில் இருந்த கேட்டரிங் கல்லூரிக்கு சென்று ஆனந்தராஜ் சைட் அடித்த அந்த பெண்ணை தேர்ந்தெடுத்து தனது படத்தில் நடிக்க வைத்தார். அப்படி அவர் இயக்கிய படம் தென்றலே என்னை தொடு, அந்த படத்தில் நடித்த நடிகை ஜெயஸ்ரீ.

jayasri

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தார் ஜெயஸ்ரீ. ஆனந்தராஜ் போராடி வாய்ப்புகளைப் பெற்று சினிமாவில் நுழையும்போது, ஜெயஸ்ரீ வாய்ப்பு இல்லாமல் வெளியேறினார். எனவே, அவருடன் நடிக்கும் வாய்ப்பு ஆனந்தராஜுக்கு கிடைக்கவில்லை. ஆனால், ஜெயஸ்ரீயின் சகோதரி சுகன்யாவுடன் ஆனந்தராஜ் நடித்தார். வில்லன் நடிகர் ஆனந்தராஜுக்குள் இப்படி ஒரு ஒன் சைடு லவ் ஸ்டோரி இருந்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • DMDK நாள் குறித்த அதிமுக – தேமுதிக – தவெக.. மாறப் போகிறதா தமிழக அரசியல் களம்?
  • Views: - 188

    0

    0