ப்பாஹ் என்ன பொண்ணுடா… அர்ஜுன் மகளின் அழகில் மயங்கிய கோலிவுட் ரசிகர்கள் – அந்த செல்லத்த சீக்கிரம் தூக்கிட்டு வாங்கடா!

Author: Shree
19 August 2023, 11:56 am

தமிழ் திரையுலகில் ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வருபவர் அர்ஜுன். இவரது மகள் ஐஸ்வர்யாவும் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு பூபதி பாண்டியன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பட்டத்து யானை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா.

இதையடுத்து அவருக்கு எதிர்பார்த்த பட வாய்ப்பு கிடைக்காததால், 5 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா, கடந்த 2018-ம் ஆண்டு வெளியான சொல்லிவிடவா படம் மூலம், மீண்டும் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். இப்படத்தை அவரது தந்தை அர்ஜுன் தான் இயக்கி இருந்தார். அவரது தாயார் நிவேதிதா தான் இப்படத்தை தயாரித்து இருந்தார்.

இப்படமும் தோல்வியைத் தழுவியதால் நடிப்புக்கு முழுக்கு போட்ட ஐஸ்வர்யா, கடந்த 5 ஆண்டுகளாக சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். இதன்பின் தற்போது இவருக்கு தெலுங்கு பட வாய்ப்பு கிடைக்க அங்கும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். அண்மையில் உமாபதி ராமய்யாவை திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா மட்டும் தான் மகள் என பலர் நினைத்திருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால், அவருக்கு இரண்டாவது மகள் அஞ்சனா சர்ஜா என்ற மற்றொரு மகளும் இருக்கிறாள். அவ்வப்போது அஞ்சனாவும் தனது சமூகவலைத்தள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கிளாமர் போட்டோவை பார்த்து கோலிவுட் ரசிகர்கள் எல்லோரும் அட நாம அர்ஜுனின் மகளா இது? அந்த செல்லத்தை கோலிவுட் பக்கம் தூக்கிட்டு வாங்கடா என அழகில் மயங்கி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 442

    0

    0