கோடி கோடியா கொட்டி கொடுத்தாலும் உன் கூட நடிக்க மாட்டேன்.. கடுப்பான அர்ஜுன்.. வைரலாகும் வீடியோ..!

Author: Vignesh
30 September 2023, 12:15 pm

தொண்ணூறு காலங்கட்டங்களில் திரை உலகில் முன்னணி நாயகனாகவும் ஆக்சன் கிங் ஆகவும் திகழ்ந்தவர் தான் நடிகர் அர்ஜுன். ஜாக்கி ஜான் போல இவர் ஆக்ஷனில் கலக்கி வருபவர். தற்போது தமிழில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்போடு நின்று விடாமல் இவர் டைரக்ஷன், தயாரிப்பு போன்ற பன்முகத்திறமையைக் கொண்டவர். மேலும், இவர் தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து தெலுங்கில் ஒரு படத்தை டைரக்ட் செய்ய இருந்தார்.

arjun-updatenews360

இதனிடையே, தமிழில் சில படங்களில் நடித்திருக்கும் இவர் மகள் ஐஸ்வர்யாவுக்கு பெரிய அளவு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் அந்த வாய்ப்புகளை தேடி வர வைப்பதற்காகவே தெலுங்கில் தன் மகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருந்தார். இதனை அடுத்து தற்போது அர்ஜுன் ஒரு மிகப்பெரிய பிரஸ்மீட்டை நடத்தி இருக்கிறார். அதில் எந்த படத்தில் ஹீரோவாக விஷ்வக் குறித்து பல புகார்களை  அடுக்கியுள்ளார்.இதனைத் தொடர்ந்து இவர் மகள் அந்த தெலுங்கு படத்தில் அறிமுகப்படுத்துவதற்காகவும் அந்த படத்தில் விஷ்வக்கை நடிக்க வைக்க கேட்டபோது அதற்கு அவர் சம்மதித்தாராம்.

arjun-updatenews360

அதற்கு அவர் கேட்ட சம்பளத்தையும் கொடுக்க முன்வந்த போது ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் நேரத்தில் அனைத்து மூத்த நடிகர்களும் சரியான நேரத்துக்கு வந்து விடுவார், ஆனால் ஹீரோ மட்டும் வரவில்லை தொடர்ந்து பலமுறை முயற்சி செய்தும் சரியான பதில் அவர்களுக்கு கிடைக்கவில்லை.இதுவரை என் வாழ்க்கையில் இதுபோல போனை யாருக்கும் இத்தனை முறை செய்ததில்லை என்று மிகுந்த வருத்தத்தோடு கூறி இருக்கிறார். எனவே இப்படிப்பட்ட ஒரு நடிகரை நான் என் படத்தில் நடிக்க வைக்க விரும்பவில்லை. மேலும் இந்த நடிகரை இந்தப் படத்தில் வேறொருவரை நடிக்க வைக்க உள்ளதாக கூறியுள்ளார்.

arjun-updatenews360

இதைத்தொடர்ந்து, எத்தனை கோடி ரூபாயை விஷ்வக் தனக்கு கொடுத்தாலும் அவரோடு இணைந்து நடிக்க மாட்டேன் என்று ஆவேசமாக அர்ஜுன் இந்த பிரஸ்மீட்டில் தெரிவித்திருப்பது திரை உலக வட்டாரத்தை திரும்பி போட்டுள்ளது என்று கூறலாம். இவ்வாறு, அர்ஜுன் பேசிய பழைய வீடியோ தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 383

    0

    0