மனைவியுடன் கட்டியணைத்து ரொமான்ஸ்… அர்ஜுனின் திருமண புகைப்படம் வைரல்!

Author: Rajesh
10 February 2024, 7:19 pm

ஒரு காலத்தில் ஹீரோவாக நடித்து வந்த ஆக்சன் கிங் அர்ஜூன் தற்போது வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துவருகிறார். அப்படி இவர் நடித்து தமிழில் வெளியான இரும்புத்திரை, கொலைகாரன் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்துவரும் லியோ படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இவர் நிவேதிதா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஐஸ்வர்யா தமிழில் விஷாலுக்கு ஜோடியாக பட்டத்து யானை படத்தில் நடித்திருந்தார். ஐஸ்வர்யா நீண்ட காலமாக தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்து நிச்சயம் செய்துக்கொண்டனர்.

62 வயதாகியும் அர்ஜுன் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அர்ஜுன் தன் மனைவியுடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படம் மற்றும் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Nayanthara calls off Lady Super Star லேடி சூப்பர் ஸ்டார் வேண்டாம்.. நயன்தாரா அறிவிப்புக்கு காரணம் என்ன?