ரொம்ப கம்மி…. இவ்வளவு தான்னு அவங்களே முடிவு பண்ணிடுறாங்க – நடிகர் அருள்நிதி வேதனை!

Author:
4 செப்டம்பர் 2024, 9:35 காலை
arulnithi
Quick Share

நல்ல அழகான வசீகரத் தோற்றம் கொண்டு இளம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் அருள்நிதி. இவர் உதயநிதி ஸ்டாலினின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது .இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு வம்சம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் .

முதல் திரைப்படத்திலேயே மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அருள்நிதிக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான விஜய் விருது உள்ளிட்டவை கொடுத்து கௌரவிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் உதயன், மௌனகுரு, தகராறு, ஒரு கன்னியும் மூணு களவாணிகளும், டிமான்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள் ,களத்தில் சந்திப்போம் இப்படி பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

Arulnithi

கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் டிமான்டி காலனி 2 இந்த திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அருள்நிதியிடம் உங்களது சம்பள விஷயம் பற்றி கூறுங்கள். கடைசிவரை நீங்கள் ஒரே மாதிரி சம்பளத்தை தான் வாங்குவதாக கேள்விப்பட்டிருந்தோம் என கேட்டதற்கு…

நான் இன்னும் பெரிய அளவில் சம்பளமே வாங்கல என்று நீங்களே பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தீங்க. நீங்க தொடர்ச்சியாக நல்ல ஹிட் படங்களை கொடுக்குறீங்க. சிறப்பான நடிப்பை தான் வெளிப்படுத்துங்க. நீங்க நடிச்சாவே தயாரிப்பாளர்களுக்கு ஓரளவுக்கு லாபம் கண்டிப்பா கிடைச்சிடும் அப்படிங்கறப்போ அவங்க ஏன் உங்க சம்பளத் தொகையை அதிகப்படுத்தனும் நினைக்கல?

Demonte Colony 2

நீங்க ஏன் இதுவரைக்கும் அதிகமா கேட்டதே இல்லை? என கேட்டதற்கு பதில் அளித்த அருள்நிதி… அப்படி இல்லை என்னுடைய சம்பளத்தை அவங்களாவே பிக்ஸ் பண்ணிட்டுவாங்க. அவங்களே எனக்கு இவ்வளவு தான் கொடுக்கணும் அப்படின்னு முடிவு பண்ணி தான் படத்துக்கு கூப்பிடுவாங்க. சம்பள விஷயத்தில் பெருசா டிமாண்ட் பண்ணதே கிடையாது.

சம்பள விஷயத்துக்காக நான் ஒரு படத்தில் இருந்து பின்வாங்கியதும் கிடையாது என்று கொஞ்சம் வேதனையோடு பேசி இருந்தார். நடிகர் அருள்நிதி ரூ. 90 லட்சம் ஒரு படத்திற்கு சம்பளமாக வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Death sentence தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் : அதிரடி தண்டனை!
  • Views: - 208

    0

    0