சினிமாவை தாண்டி பிசினஸில் கோடிகளை குவிக்கும் ஆர்யாவின் சொத்து இத்தனை கோடியா?

இளம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆர்யா கட்டுமஸ்தான உடல் தோற்றம், மிரட்டலான body language என ஆரம்பத்தில் வில்லனாக நடித்து பரீட்சியமனார். கொஞ்சம் கொஞ்சமாக அவரது நடிப்பு திறமையை வளர்த்துக்கொண்டு முன்னணி ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார்.

2005ஆம் ஆண்டு விஷ்ணுவர்த்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஆர்யா தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு, வேட்டை, சேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஆர்யா இளம் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு அழகான ஒரு மகளும் இருக்கிறார்.

தொடர்ந்து திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். கடைசியாக இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்.’ படத்தில் கரடுமுரடான கிராமத்து இளைஞனாக நடித்திருந்தார். இந்த படம் ஓரளவுக்கு ஓடினாலும் பெரிதாக பேசப்படவில்லை. அந்த படத்திற்காக ஆர்யா ரூ.14 கோடி சம்பளம் வாங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆர்யாவுக்கு சார்பட்டா பரம்பரை படத்திற்கு பின்னர் தான் சம்பள உயர்வு ஆனதாக கோலிவுட் செய்திகள் கூறுகிறது.

திரைப்படத்தையும் தொடர்ந்து பிசினஸில் கோடிக்கணக்கில் வருமானம் பார்க்கிறார் ஆர்யா. ஆம், சென்னையில் பிரபலமான அரேபியன் வகை உணவுகள் கொண்டு ஒரு உணவகத்தை நடத்தி வருகிறாராம். அதில் வேளச்சேரி, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆர்யாவின் உணவக கிளைகள் உள்ளதாம். இப்படி சினிமா, பிசினஸ் என இரண்டிலும் கோடி கணக்கில் வருமானம் ஈட்டும் ஆர்யாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 80 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. ஆர்யா ஒரு படத்திற்கு மட்டும் ரூ.7 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அத்துடன் அவரிடம் ஆடி கியூ7, பென்ஸ் இ கிளாஸ் போன்ற சொகுசு கார்களும், ஆடம்பர ப பங்களா , ரியல் எஸ்டேட்டில் முதலீடு என ராஜவாழ்க்கை வாழ்கிறாராம்.

UpdateNews360 Rajesh

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

1 day ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

1 day ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

2 days ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

2 days ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

2 days ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

2 days ago

This website uses cookies.