ஷாலினி என்னிடம் மன்னிப்பு கேட்டார்.. அதுக்கு காரணம் அஜித் தான்.. பப்லு ப்ரித்வி பகிர்ந்த தகவல்..!

சின்னத்திரை நடிகர் பப்லு 24 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்கிற விஷயம் தான் சோஷியல் மீடியாவில் ஹா ட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகின்றது.

இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பப்லு அளித்த பேட்டியில், என் முதல் மனைவி பீனாவை தான் காதலித்துத் தான் திருமணம் செய்து கொண்டேன். எங்கள் இருவருக்கும் பிறந்த மகன் அகத். அவனுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ளது என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்.

நானும் எனது மனைவியும் நண்பர்களாக இருந்து திருமணம் செய்து கொண்டதால், எங்களால் வாழ்க்கையில் இணைந்து பயணிக்க முடியவில்லை. தினமும் சண்டை வந்த காரணத்தால், நான் தனியாக வந்து விட்டேன். ஆனால், மாதத்திற்கு ஒரு நாள் என் மகனை வெளியில் சென்று சந்திப்பேன். கடந்த 6 வருடமாக தனியாகத் தான் வசித்து வருகிறேன்.

இதனால் எனக்கு மன அழுத்தம், வலி என மனதளவில் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். அத்தோடு மன அழுத்த த்தால் திடீரென இறந்து விட்டால் என்ன செய்வது என்று பல நாள் வீட்டின் கதவு, ஜன்னல்களைக் கூட திறந்து வைத்துக் கொண்டு தூங்கி இருக்கிறேன்.

மேலும் இப்படி ஒரு சூழ்நிலையில் தான் நான் அந்த பெண்ணை சந்தித்தேன். அந்த பெண் என்னை விரும்புகிறாள். எனக்கு பின் தனது மகனை அவள் நிச்சயம் பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை இருக்கிறது. வயது என்பது ஒரு நம்பர் தான். நான் இப்போதும் அழகாகவே இருக்கிறேன்.

வயதானவனை ஏன் காதலித்தாய் என்று நானும் அந்த பெண்ணிடம் பல முறை கேட்டு இருக்கிறேன். அதற்கு அவள் உங்களின் வயது எனக்கு ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை. நீங்கள் மட்டும் தான் எனக்கு தெரிகிறீர்கள் என்று கூறுவாள். என் முதல் மனைவி பீனாவிடம் இரண்டாவதாக குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி பல முறை பேசி இருக்கிறேன். ஆனால், அவளோ என் மகனின் நிலைமையை பார்த்து வேண்டாமென்று மறுத்து விட்டாள்.

ஆனால், இந்த பெண்ணுடன் இரண்டாவதாக குழந்தை பெத்துக் கொள்ள நான் விரும்புகிறேன். எனக்கு அந்த ஆசை இருக்கிறது. எனினும் அது மட்டும் இல்லாமல் நான் 24 வயது பெண்ணை திருமணம் செய்தால் யாருக்கு என்ன பிரச்சனை. இந்த வயதில் தான் காதல் வரணும். வயதானால் காதல் வரக்கூடாது என்று ஏதாவது இருக்கிறதா..? என பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

என் முதல் மனைவி பீனாவிடம் இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வது பற்றி பேசினேன். அவர், இரண்டாம் திருமணத்திற்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. அத்தோடு 24 வயது பெண் என்பது தான் பீனாவிற்கு வருத்தம்.

இத்தனை ஆண்டுகள் விவாகரத்து வாங்காமல் பிரிந்து இருந்தோம். இனி விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று கூறினார். ஏற்கனவே 6 வருடங்கள் பிரிந்து இருந்ததால் ஒரு மாதத்திலேயே எளிதாக டைவர்ஸ் கிடைத்து விட்டது.

அத்தோடு நான் யாருக்கும் எப்போதும் துரோகம் செய்தது இல்லை. அதே போல இந்த பொண்ணுக்கும் துரோகம் செய்ய மாட்டேன் என்று நடிகர் பப்லு தனது இரண்டாவது திருமணம் குறித்து விளக்கம் கொடுத்தார்.

மேலும் பேசிய அவர், சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகை ஷாலினி குறித்து பேசியது இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதாவது அவர் பேசியதாவது, நானும், நடிகை ஷாலினியும் ஒரு ரெஸ்டாரெண்டில் அடிக்கடி மீட் செய்துள்ளோம். ஆனால் ஒரு முறை கூட ஷாலினியிடம் பேசவில்லை, அவரும் என்னிடம் பேசவில்லை. ஒரு நாள் ஷாலினிடம் இருந்து எனக்கு கால் வந்தது. அப்போது அவர், உங்களுடன் படம் பண்ணவில்லை, நான் பேசினால் உங்களுக்கு தொந்தரவாக இருக்கும் என்று தான் நான் பேசவில்லை.

இதனிடையே, இதை அஜித்திடம் சொன்னேன் அவர் ரொம்ப Feel செய்தார், இப்படி நடந்து கொள்வது தவறு எனவும், அப்படி செய்வது மோசமான மேனர்ஸ் தனக்கு அஜித் அட்வைஸ் செய்ததாகவும் தெரிவித்தார். மேலும் பப்லு ஒரு சீனியர் என்றும் அவரிடம் பேசுவது தான் முறையாக இருக்கும் என்று ஷாலினிக்கு அட்வைஸ் கொடுத்த அஜித், அவரிடம் சாரி கேட்கவும் அறிவுறுத்தியுள்ளார் என்று பப்லு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

தளபதி விஜய் CM ஆனால்.. ராகுல் காந்தி PM : எழுதி வெச்சிக்கோங்க.. தவெக பெண் நிர்வாகி பேச்சு!

வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…

6 hours ago

தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…

6 hours ago

ருதுராஜ்க்கு பதில் மீண்டும் கேப்டனாக தல தோனி : சிஎஸ்கே அணியில் நடந்த திடீர் மாற்றம்!

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…

7 hours ago

ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…

அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…

8 hours ago

பேட்டிக் கொடுக்க பயந்தாரா புஸ்ஸி ஆனந்த்.. தெறித்து ஓடிய தவெக தொண்டர்கள்!

வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…

8 hours ago

மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?

ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…

8 hours ago

This website uses cookies.