பெத்த பிள்ளை கூட கண்டுக்கல..கண்ணீரில் பிரபல நடிகை..ஓடி சென்று உதவிய KPY பாலா.!
Author: Selvan3 March 2025, 5:50 pm
தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டிய பாலா
தமிழ் திரைப்பட உலகில் பழம்பெரும் நகைச்சுவை நடிகை பிந்து கோஷ்,அண்மைக் காலமாக கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.இதனால் சிகிச்சை பெறும் நிலைமை எட்டிய அவர்,மருத்துவ செலவுகளைச் சமாளிக்க முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்க: அஜித்துக்காக தனுஷ் எடுக்க போகும் தரமான சம்பவம்…ஒருவேளை இருக்குமோ.!
சமீபத்தில்,தனியார் யூடியூப் சேனலுக்கு வழங்கிய நேர்காணலில், தன்னுடைய உறவினர்கள்,மகன் உட்பட யாரும் தன்னை கவனிக்கவில்லை என்ற வேதனையை பகிர்ந்துக்கொண்டார்.இதைப் பார்த்த பலரும்,அவருக்கு உதவி செய்யக் கோரிய நிலையில், நடிகர் பாலாவும் உதவி செய்துள்ளார்.
நடிகை ஷகீலா மூலமாக பிந்து கோஷின் நிலைமையை அறிந்த நடிகர் பாலா, நேரடியாக அவரது இல்லத்துக்கு சென்று ரூபாய் 80,000 நிதியுதவியாக வழங்கியதோடு,மருத்துவ செலவுகளையும் பார்ப்பதாக உறுதியளித்தார்.இதைக் கேட்ட பிந்து கோஷ்,கண்ணீருடன் பாலாவிற்கு நன்றி தெரிவித்தார்.
பாலாவின் இந்த செயல் பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. மேலும், நடிகர் ரிச்சர்ட், ராமலிங்கம் உள்ளிட்ட சிலரும் உதவியளித்துள்ளனர்.இதன் மூலம் தற்போது அவருடைய மருத்துவ செலவுக்கு பலரும் தங்களால் முடிந்த உதவி செய்து வருகின்றனர்..